மேலும் அறிய

Rolex Surya : ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதை அன்றே கணித்தாரா சூர்யா..?

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதை அன்றே சூர்யா கணித்தார் என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன், பஹத்பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த 3-ந் தேதி வெளியாகியது விக்ரம் திரைப்படம். இந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் பிரபல நடிகர் சூர்யா கொடூர வில்லனாக வந்து அசத்தியிருப்பார். அவர் ஏற்று நடித்துள்ள ரோலக்ஸ் கதாபாத்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் ரோலக்ஸ் மற்றும் ரோலக்ஸ் சார் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சூர்யாவின் வருகை ரசிகர்களுக்கு படத்தை பல மடங்கு கொண்டாடவைத்துள்ளது. மேலும், படத்தின் முடிவு கைதி 2ம் பாகம் மற்றும் விக்ரம் 3ம் பாகத்தின் தொடர்ச்சி போலவே காட்டப்பட்டிருப்பது ரசிகர்களை மேலும் குஷியாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூர்யாவிடம் இயக்குனர் லிங்குசாமி நீங்களும், கார்த்தியும் எப்போது இணைந்து நடிப்பீர்கள்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சூர்யா நான் அமைதியான வில்லனாகவும், கார்த்தி பட்டை போட்ட ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை கூறினார்.


Rolex Surya : ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதை அன்றே கணித்தாரா சூர்யா..?

இதைப்போலவே, கைதி படத்தில் நடிகர் கார்த்தி பட்டை போட்டு ஒரு கிராமத்து நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் எனும் கொடூர வில்லன் கெட்டப்பில் கடைசி கட்டத்தில் மிரட்டியிருப்பார். கைதி, விக்ரம் படங்களுக்கு கனெக்‌ஷன் இருப்பது போலவே இயக்குனர் படத்தை முடித்திருப்பதால் நிச்சயம் இதன் தொடர்ச்சி பாகங்களில் சூர்யா கூறியபடி தனது வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

சூர்யா அன்று சொன்ன வார்த்தை, ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அன்றே கணித்த சூர்யா என்று தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் உள்ளிட்ட நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய பல விஷயங்களை அன்றே கணித்தார் சூர்யா என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைரலாகியது எனபது குறிப்பிடத்தக்கது. தற்போது, ரோலக்ஸ் கதாபாத்திரமும் அன்றே கணித்த சூர்யா என்று வைரலாகி வருகிறது.



Rolex Surya : ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதை அன்றே கணித்தாரா சூர்யா..?

சூரரைப் போற்று, ஜெய்பீம் என்ற மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்த சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு அடுத்து தற்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், பாலா இயக்கத்தில் கடலோடி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு அவர் லோகேஷ் கனகராஜூடன் மிரட்டலான ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கலாம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
JD Vance Vs Iran: “சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
“சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Embed widget