மேலும் அறிய

Rolex vs Dilli: கார்த்திக்கு வில்லன்? அன்றே கணித்த சூர்யா... 8 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன...?

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி, சூர்யாவிடம் சினிமாவில் எப்போது இணைவதை எதிர்பார்க்கலாம் என கேட்டார். 

விக்ரம் படத்தில் நடித்துள்ள சூர்யாவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் அவரது பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். 

இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படமானது உலகளவில் வசூலில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கமல் ரசிகர்கள் கொண்டாடி வரும்  நிலையில் படத்தில் 5 நிமிடமே வந்தாலும் சூர்யாவின் கேரக்டர் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் விக்ரம் படத்தில் லோகேஷின் முந்தைய படமான கார்த்தி நடித்திருந்த கைதி படத்தை லிங்க் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. 

ஏற்கனவே விக்ரம்-3  படத்தில் சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதை கமல் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் கைதி படத்தின் கார்த்தியின் டில்லி கதாபாத்திரம் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கைதி படத்தின் 2வது பாகம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் கைதி, விக்ரம் ஆகிய படங்களின் கதைகளை ஒன்றிணைத்து இந்த படம் முழு வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தனது தம்பி கார்த்திக்கு வில்லனாக நடிப்பார் என ஏற்கனவே 8 ஆண்டுகளுக்கு முன் சூர்யா தெரிவித்திருந்தார். சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி, சூர்யாவிடம் சினிமாவில் எப்போது இணைவதை எதிர்பார்க்கலாம் என கேட்டார். 

அதற்கு நான் அமைதியான வில்லனாகவும், கார்த்தி நெற்றியில் பட்டையெல்லாம் போட்டுகிட்டு நல்ல பையனாகவும் இருந்தால் ஒரு படம் நடிக்க தயார் என தெரிவித்திருந்தார். அதன்படி கைதி படத்தில் கார்த்தி நெற்றியில் பட்டையுடன் இருப்பது போலவும், சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் போட்டோவும் இணைத்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இதன்மூலம் ஏற்கனவே பல நிகழ்வுகளை முன்கூட்டியே தனது படங்களில் கணித்ததாக பாராட்டப்பட்ட சூர்யாவின் கணிப்பு இம்முறையும் பொய்யாகாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
Embed widget