வசூலில் முரட்டடி வாங்கிய கண்ணப்பா...இதெல்லாம் சகஜம் என ஆறுதல் சொன்ன கங்குவா
மிகப்பெரிய பட்ஜெட்டில் தெலுங்கில் வெளியாகியுள்ள கண்ணப்பா பட நடிகர் விஷ்ணு மஞ்சுவுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்

கண்ணப்பா நடிகை பாராட்டிய சூர்யா
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் கண்ணப்பா. விஷ்ணு மஞ்சு கதை மற்றும் திரைக்கதை எழுதி முகேஷ் குமார் சிங் இப்படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால், அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், சப்தகிரி, முகேஷ் ரிஷி, மதுபாலா, ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரம்மாஜி, தேவராஜ், ரகுபாபு, சிவா பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, சுரேகா வாணி, ப்ரீத்தி முகுந்தன் , அத்ஹுர் அத்ஹுன் வாணி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
கண்ணப்பா படத்தில் நாயகன் விஷ்ணு மஞ்சுவுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து மலர்கொத்தை அனுப்பியுள்ளார். இதில் அவர் " இந்த அற்புதமான மைகல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள். பலவித எதிர்பார்ப்புகளை கடந்து உங்கள் கனவு , கடின உழைப்பு மற்றும் நம்பிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது. இத்தனை பேரின் மனங்களை கவரும் ஒரு படத்தை நீங்கள் உருவாக்கியதை நினைத்து பெருமை கொள்கிறேன். நீங்கள் இன்னும் பெரிய உயரங்களை தொட வேண்டும்' என சூர்யா தெரிவித்துள்ளார்
Big brother @Suriya_offl ! Thank you so much for the flowers and more so the message.
— Vishnu Manchu (@iVishnuManchu) June 30, 2025
I continue to look at your work for inspiration and today getting such a message from you is one of the biggest highlight. Love you my big brother. pic.twitter.com/C59GiUyGCM
வசூலில் முரட்டடி வாங்கிய கண்ணப்பா
கண்ணப்பா திரைப்படம் சுமார் ரூ 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 67 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பா ஒரு நாத்திகராக இருந்து தீவிர சிவபக்தனாக மாறும் புராணக் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படத்தின் ரிலீஸுக்கு வெகு நாட்கள் முன்பே படக்குழு தொடங்கிவிட்டது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் லைவ் லொக்கேஷனில் நடைபெற்றது. தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என ஐந்து மொழிகளில் 5400 திரையில் வெளியாகியது. மேலும் கண்ணப்பா படத்தை பார்த்து படத்தை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டது. ஆனால் எதிர்பார்த்ததில் பாதிக்கூட படத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. 200 கோடி செலவில் எடுக்கப்பட்ட கண்ணப்பா இதுவரை ரூ 25 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
கண்ணப்பா படத்தைப் போலவே சூர்யாவின் கங்குவா திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் தோல்வியை தழுவியது. இந்த மாதிரியான தருணங்களில் படக்குழு உற்சாகமிழக்காத வகையில் சூர்யாவின் வாழ்த்து அமைந்துள்ளது என்று சொல்லலாம்.





















