Actor Vijay: அண்ணாசாலையில் லைசென்ஸ் இல்லாமல் போலீசில் சிக்கிய விஜய்..கடைசியில் நடந்தது இதுதான்!
விஜய் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அடியெடுத்து வைத்த அவரை, ரசிகர்கள் இளைய தளபதியாக கொண்டாடினர்.
நடிகர் விஜய்யின் கல்லூரி காலத்தில் நடந்த விஷயம் ஒன்றை அவரது நெருங்கிய நண்பரும், இயக்குநரும் நடிகருமான ஸ்ரீநாத் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா என நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமன் இசையமைத்துள்ள இப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அதேசமயம் விஜய் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அடியெடுத்து வைத்த அவரை, ரசிகர்கள் இளைய தளபதியாக கொண்டாடினர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் உருவெடுக்க, இளைய தளபதி , தளபதியாக மாறினார். ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய நடிகராக விஜய் திகழ்கிறார்.
View this post on Instagram
அதேபோல் விஜய்யின் நெருங்கிய நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் அவர்களின் புகைப்படங்களும், நண்பர்களிடம் விஜய் நடந்துக் கொள்ளும் விதம் குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும். சஞ்சீவ், ஸ்ரீநாத்தும் பல நேர்காணல்களில் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஒரு நேர்காணலில் ஸ்ரீநாத் விஜய்யுடன் பைக்கில் சென்று போலீசில் சென்று மாட்டிக் கொண்டது குறித்து தெரிவித்துள்ளார்.
ஒருநாள் என்னுடைய யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை விஜய் ஓட்ட, நான் பின்னால் உட்கார்ந்து சென்றேன். எங்க இரண்டு பேர்கிட்டேயும் லைசென்ஸ் கிடையாது. அண்ணா சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்துவதை தூரத்தில் இருந்தே நான் பார்த்து விட்டேன். விஜய்யிடம் மச்சான் அங்க போலீஸ் நிக்குறாங்க. நீ வேகமா அழுத்து என ஆக்ஸிலேட்டரை சொன்னால், விஜய் வேகமாக சென்று பிரேக்கை அழுத்தி விட்டார். நேராக போலீஸ் கிட்ட வண்டி நின்னுட்டு. என்ன மச்சான் என கேட்க, நீதானே அழுத்து அழுத்து என சொன்ன என கூறினார். பின்னர் போலீசாரிடம், விஜய் அப்போது நடிகராக அறிமுகமாகவில்லை. அதனால் அவரது அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரோட பையன் என சொல்லி விட்டு அங்கிருந்து வந்தோம் என தெரிவித்துள்ளார்.