S.J.Suryah: நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு - பதறிய ரசிகர்கள்
யாத சத்திய நாராயணா எழுதி இயக்கியுள்ள படம் ரஸாக்கர். இந்தப் படத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா,மேத்யூ வர்கீஸ், நடிகை வேதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நடிகர் பாபி சிம்ஹா நடித்த பட விழா ஒன்று தான் கலந்து கொள்ளாத காரணத்தை இயக்குனர் எஸ் ஜே சூர்யா சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.
யாத சத்திய நாராயணா எழுதி இயக்கியுள்ள படம் ரஸாக்கர். இந்தப் படத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா,மேத்யூ வர்கீஸ், நடிகை வேதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகும் ரஸாக்கர் படம் 1948 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் நடந்த விடுதலை இயக்கம் பற்றிய நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடைய ரஸாக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, வேதிகா, தலைவாசல் விஜய், தயாரிப்பாளர், இயக்குனர் சத்திய நாராயணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் மற்றும் நடிகரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
Dear @actorsimha thambi due to the heavy viral fever I couldn’t attend the function very very sorry & apologies thambi 🙏 and wishing you a great launch and wishing a great success of RASAKKAR all the very best to the producer garu & director garu & team 💐💐💐💐💐💐💐💐 pic.twitter.com/1Yp6rZhoDf
— S J Suryah (@iam_SJSuryah) February 20, 2024
ஆனால் அவர் நிகழ்ச்சிக்கு வராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரஸாக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு தான் வராத காரணத்தை எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மன்னித்துக் கொள் பாபி சிம்ஹா தம்பி. ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்விற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரஸாக்கர் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். மேலும் ரஸாக்கர் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைத்தும் என் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Actress Trisha: ''திரிஷானு எங்க சொன்னேன்...'' திடீர் பல்டி அடித்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ!