Actor Sivakumar : எங்க வீட்டுக்காரம்மா அப்போவே சொன்னாங்க...சால்வையை வீசியது குறித்து சிவகுமாரின் நண்பர் கரீம்
தனக்கு பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்ததே நடிகர் சிவகுமார்தான் என்று சிவகுமாரின் நண்பர் கரீம் தெரிவித்துள்ளார்
![Actor Sivakumar : எங்க வீட்டுக்காரம்மா அப்போவே சொன்னாங்க...சால்வையை வீசியது குறித்து சிவகுமாரின் நண்பர் கரீம் Actor Sivakumar Issues Clarification sivakumar friend explains Shawl event at Karaikudi Actor Sivakumar : எங்க வீட்டுக்காரம்மா அப்போவே சொன்னாங்க...சால்வையை வீசியது குறித்து சிவகுமாரின் நண்பர் கரீம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/5ac0510a1ac7b5855234f5ccdb696f0b1709039457081572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காரைக்குடியில் நடிகர் சிவகுமாருக்கு பொன்னாடை அணிவிக்க வந்த கரீம் நடிகர் சிவகுமார் குறித்து பேசியுள்ளார்.
சிவகுமார் சால்வையை வீசியது ஏன்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய ’இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கரீம் என்பவர் சிவகுமாருக்கு சால்வை வழங்கினார். அதை வாங்கி சிவகுமார் கோபத்தில் அதை கீழே வீசினார். இது வீடியோவில் பதிவாக சிவகுமாரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலானது. சிவகுமாரின் செயல் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
யார் இந்த கரீம்
சிவகுமாரும் அவருக்கு பொன்னாடை வழங்கிய கரீமும் 50 ஆண்டு கால நண்பர்கள் என்றும் சிவகுமார் விளையாட்டிற்காகத்தான் அந்த சால்வையை வீசியதாகவும் க்ரீம் குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது நடிகர் சிவகுமார் மற்றும் கரீம் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் சிவகுமார் குறித்து கரீம் இப்படி பேசியுள்ளார்.
“1971 அம் ஆண்டு தஞ்சாவூர் மன்னார்குடியில் நான் ஒரு நாடகம் ஒருங்கிணைத்தேன். அந்த நிகழ்ச்சியை சிவகுமார் அண்ணன் தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தவர் . இந்த நிகழ்ச்சியில் அண்ணனை வரவேற்றது நான்தான் . அன்றைய தினம் முழுவது அவர் எதுவும் சாப்பிடவில்லை , என்ன சாப்பிடுகிறார் என்று நான் கேட்டபோது எனக்கு ரெண்டு நாளாக தூக்கம் இல்லை நான் வழக்கமாக சாப்பிடும் வெங்காயமும் தயிர் சாதமும் கொடு போதும் என்று அண்ணன் சொன்னார்.
அதே போல் 1974 இல் அண்ணனின் கல்யாணத்திற்கு சென்று அவரது கல்யாணத்திற்கு வந்தவர்களை வரவேற்றதும் நான்தான். ஒரு முறை அண்ணன் புதுகோட்டையில் இருந்தார். என் வீட்டில் இன்னும் ஏன் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று என்னுடைய அம்மா கேட்டபடியே இருந்தார். நான் அண்ணனிடம் சென்று இதைப் பற்றி சொன்னேன். உடனே அவரே எனக்கு ஒரு பெண் பார்த்து எனக்கு திருமணம் நடத்தி வைத்தார். 30 வருடத்திற்கு முன்பாகவே என்னுடைய திருமணத்திற்காக ஃப்ளைட் டிக்கெட் புக் செய்து திருச்சிக்கு வந்தார் அண்ணன். அந்த நிகழ்ச்சிக்கு நான் சால்வை வாங்கி வீட்டில் இருந்து புறப்படும்போதே என்னுடைய மனைவி சால்வையை எடுத்து போகவேண்டாம் என்று சொன்னார். நான் தான் நம்முடைய ஊருக்கு அவர் வருகிறார் என்பதற்காக அவரை வரவேற்கச் சென்றேன். அவருக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என்று தெரிந்தும் நான் எடுத்துக்கொண்டு போனது என்னுடைய தப்புதான்” என்று கரீம் இந்த வீடியோவில் பேசியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)