Prince 1st Single: பிரின்ஸ் பாடல் ரிலீஸ்... ‛பிம்பிலிக்கா..பில்லாப்பி...’ அனிருத் குரலில் தமன் தாறுமாறு!
தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
View this post on Instagram
தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பேவரைட் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து இந்த படமும் வசூலில் ரூ.100 கோடியை எட்டியதால் ரசிகர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகி வருகிறது. சயின்ஸ் பிக்ஷன் படமாக இது உருவாவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Here is the first single from #PRINCE 🇮🇳🕊🇬🇧
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 1, 2022
A @MusicThaman musical 🥁
Sung by my dearest @anirudhofficial ♥️
✍️ @Lyricist_Vivek
🕺 @shobimaster
Thank u @dop_gkvishnu for shooting this song😊#BimbilikkiPilapi
Tamil -https://t.co/zpqpxIES1y
Telugu - https://t.co/xAnzHGfqQX
இதனிடையே தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் பிரின்ஸ் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
View this post on Instagram
இந்நிலையில் பிரின்ஸ் படத்தில் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பிம்பிலிக்கி பிலாக்கி என தொடங்கும் இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.