”எனக்கு புகழ், பணம் தேவைப்படுது “ - அப்பவே ஓப்பனாக பேசிய நடிகர் சிவக்கார்த்திகேயன்!
"எனக்கு அதிகப்படியான வலி எதுன்னா என் அப்பாவுடைய மரணம்தான். அவருடைய பையன் தான் இவரு அப்படிங்குற நிலைக்கு வரனும்னு ஆசை இருந்துச்சு"
சின்னத்திரையில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது கலைப்பயணத்தை தொடங்கிய நடிகர் சிவக்கார்த்திகேயன் இன்று தனக்கென தனி மார்கெட்டையே உருவாக்கியுள்ளார். இவர் படத்தை எடுத்தாலோ வாங்கினாலோ அத்தனை பெரிய நஷ்டம் ஏற்படாது என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்கள் மத்தியிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறார் என்றால் அது அவர் தன் உழைப்பின் மீது கொண்ட நம்பிக்கைதான். முதன் முதலாக நடிக்க வந்த சமயத்தில் , தனது கடந்த காலத்தை அசைப்போட்டிருக்கிறார் சிவக்கார்த்திகேயன்.
View this post on Instagram
அதில்"விஜய் டிவியில ஆங்கர் ஆகுறது ரொம்ப கஷ்டம் . திரைப்படத்தில் ஹீரோவாகுறது எப்படி கஷ்டமோ அப்படித்தான் அதுவும் . விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பட்டியல எடுத்து பார்த்தா கொஞ்சம் பேர்தான் இருந்துருப்பாங்க. ஆங்கரா ஆகனும்னா அவங்களிடம் ஏதாவது தனி சிறப்பு இருக்கனும். பி.இ. எம் .பி,ஏ முடிச்சுட்டு இந்த ஃபீல்டுக்குள்ள வந்த உடனேயே அம்மா பயந்தாங்க. நிறைய பேர் தடுத்தாங்க. வேண்டாம்னு சொன்னாங்க . இன்னும் சிலர் கேவலமா கூட பேசினாங்க. ஏன் அவனுக்கு அறிவு இல்லாம போச்சா..அப்படியெல்லாம் பேசினாங்க. இதுவும் நல்ல ஃபீல்டுதான்னு புரிய வைக்கனும்னா நான் நல்ல பேர் வாங்கனும். அதனால எனக்கு இந்த பேர் கண்டிப்பா தேவைப்படுது. என் சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாம் எனக்கு தெரிந்த ஒருத்தன் இப்படி இருந்தான், மீடியான்னு போனான் என்ன சாதித்தான் அப்படினு கேட்காம இருக்க, என்னை நிறைய பேருக்கு பிடிக்கும், நிறைய பேருக்கு தெரியும் அப்படிங்குற புகழ் எனக்கு தேவைப்படுது. அதையும் தாண்டி பணம் எனக்கு தேவைப்படுது. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அவமானம் இருக்கும். வலி இருக்கும். எனக்கு அதிகப்படியான வலி எதுன்னா என் அப்பாவுடைய மரணம்தான். அவருடைய பையன் தான் இவரு அப்படிங்குற நிலைக்கு வரனும்னு ஆசை இருந்துச்சு. ஆனால் அதுக்கு என்ன பண்ணனும்னு தெரியல. முதல்ல என்னை ஆங்கரா போட்டுட்டு, இல்லை சரியில்லை அப்படினு மாத்திட்டாங்க. அப்போ எனக்கு தோன்றியதுதான் நான் ஆங்கராக ஆகனும்னு. ஏன் பண்ண முடியாதுனு தோணுச்சு. அந்த சமயத்துலதான் எனக்கு அது இது எது வாய்ப்பு கிடைத்தது. அப்போ சாதாரணமா பண்ணக்கூடாதுனு ஹூமரை இணைத்து ஷோ பண்ணேன். திட்டமிட்ட எபிசோட்களை விட அதிகமா அந்த ஷோ போச்சு. நான் ஆங்கரா இருக்கும் பொழுது என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால் நடிக்கும் பொழுது அவங்க சொல்லுறதைதான் பேசனும், அவங்க சொல்லுறததான் நடிக்கனும். அந்த பாடி லாங்வேஜ் எல்லாத்தையும் பாண்டிராஜ் சார் மாற்ற வச்சாரு“ என்றார் சிவக்கார்த்திக்கேயன்.