Sivakarthikeyan : "உன்னை எப்படிடா ஆங்கர் ஆக்குனாங்க.." : சிவகார்த்திகேயனை கேட்ட நீயா நானா கோபி.. ஒரு ஃப்ளாஷ்பேக்
Sivakarthikeyan: ஒரு அலட்டல் இல்லாமல் படிப்படியாக தன்னை செதுக்கி முன்னேறிய சிவகார்த்திகேயன் சினிமா பயணம் அபாரமானது.
Sivakarthikeyan: உன்னை எப்படிடா ஆங்கர் ஆக்குனாங்க... சிவகார்த்திகேயனை கேட்ட கோபி.. ஒரு ஃப்ளாஷ்பேக்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என படிப்படியாக வளர்ச்சி கண்ட அருமையான கலைஞன் சிவா கார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியின் "கலக்க போவது யாரு" நகைச்சுவை ரியாலிட்டி ஷோவில் ஒரு பங்கேற்பாளராக, ஸ்டாண்ட்-அப் காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் 2007ம் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.
சிறந்த தொகுப்பாளர் :
சிவாவின் நகைச்சுவை திறனும் அவரை பல நிகழ்ச்சிகளுக்கும் ரியாலிட்டி ஷோகளையும் தொகுத்து வழங்கும் வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், அது இது எது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் தொலைக்காட்சியின் ஒரு முன்னணி தொகுப்பாளராக மிகவும் பிரபலமானார். அவரின் புதுமையான நகைச்சுவை, அடக்கமான இயல்பு இவை அனைத்தும் சிவாவை மக்களிடையே மிக விரைவில் கொண்டு சேர்த்தது.
சினிமா என்ட்ரி:
2012ல் வெளியான மெரினா திரைப்படம் மூலம் தமிழ் சிநேவல் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு பிறகு சுமார் இரண்டு ஆண்டுகளிலேயே 3 , மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், மான் கராத்தே, வறுத்த படாத வாலிபர் சங்கம் என சரமாரியாக நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவரானார் சிவாகார்த்திகேயன். அவர் நடிக்கும் அதனை படங்களும் நகைச்சுவை நிறைந்த குடும்ப பாங்கான பொழுதுபோக்கு திரைப்படங்களாக இருப்பதால் அனைத்து வயதினரையும் எளிதில் கவர்ந்தார்.
எஸ்.கே புரொடக்ஷன்ஸ்:
2014ம் ஆண்டுக்கு மேல் தான் வழக்கமாக தேர்வு செய்து நடிக்கும் கமர்ஷியல் படங்களை குறைத்து கொண்டு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாக தேர்வு செய்து நடிக்க தொடங்கினர். அடுத்தது பல வெற்றிப்படங்களில் நடித்த பிறகு தனது ஸ்டேப்பாக எஸ்.கே புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான "கனா" திரைப்படத்தை தயாரிப்பது அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் பத்தி தொட்டிகளில் எல்லாம் செம்ம ஹிட்டானது. அதனை தொடர்ந்து சமீபத்தில் "டான்" திரைப்படத்தை தனது சொந்த தயாரிப்பில் வெளியிட்டு அதுவும் நல்ல வசூலை ஈட்டியது. "டான்" படத்தில் "ஏன் பா..." எனும் கொரியன் நகைச்சுவை ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
பின்னணி பாடகர்:
2013ம் ஆண்டு இசையமைப்பாளர் இமான் இசையில் தனது முதல் திரை பாடலான "வருத்த படாத வாலிப சங்கம்..." பாடலை பாடினார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடியுள்ளார். தனது மகளுடன் இணைந்து கனா படத்தில் "வாயாடி பெத்த புள்ள..." பாடலை சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்த அவதாரமாக படலாசிரியராகி "என்ன மயிலு...", " செல்லம்மா...", "கல்யாண வயசு...", "அரபி குத்து..." என பல ஹிட் பாடல்களுக்கு பாடல்வரிகளை எழுதியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ், அயலான், மாவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவருகிறார். அப்படங்கள் விரைவில் வெளியாகும் ஏன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள்.
சிவகார்த்திகேயனின் படிப்படியான வளர்ச்சி:
ஒரு அலட்டல் இல்லாமல் படிப்படியாக தன்னை செதுக்கி முன்னேறிய சிவகார்த்திகேயன் சினிமா பயணம் அபாரமானது. தொடக்கத்தில் அவர் பல கேலி கிண்டல்களை எல்லாம் சந்தித்த பிறகு தான் தனது கடுமையான உழைப்பு, திறமையால் முன்னேறியுள்ளார். அவர் தொகுப்பாளராக இருந்த போது விருது வழங்கும் விழாவில் நீயா நான் கோபிநாத் உடன் இணைந்து அந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். அப்போது கோபிநாத் சிவகார்த்திகேயனை பார்த்து "உன்ன எப்படி டா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஆங்கர் வைச்சாங்க... " என்கிறார்.
பதில் மிகவும் நச்சுனு இருந்தது. அந்த வீடியோ உங்களுக்காக...