Silambarasan: ஓயாமல் உடற்பயிற்சி.. அடுத்த படத்துக்கு ரெடி.. கலக்கல் ஒர்க் அவுட் வீடியோ பகிர்ந்த சிம்பு!
ஏற்கெனவே சிம்பு உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று பெரும் வைரலான நிலையில் தற்போது மற்றுமொரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சிலம்பரசன்
தமிழ் சினிமா ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நடிகர் சிலம்பரசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அவரின் கம்பேக் படமாக 2021ஆம் ஆண்டு வெளியான மாநாடு அமைந்தது. தொடர்ந்து மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து படங்கள் வெளியானதால் நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.
இதனிடையே அனைவரின் எதிர்பாப்பும் சிம்புவின் 48வது படத்தை நோக்கி உள்ளது. காரணம் இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 10 ஆம் தேதி வெளியானது. அப்போது இப்படம் குறித்த அறிவிப்பை “கனவுகள் நிச்சயம் நனவாகும்” என்ற கேப்ஷனுடன் சிம்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
மேலும் தனது அடுத்தப் படத்திற்காக லண்டன் சென்றுள்ள சிம்பு, லண்டனில் இருக்கும் பலவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள் அனைத்து இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
உடல் எடையை குறைக்க பயிற்சி
இடைப்பட்ட காலங்களில் நடிகர் சிம்பு கடுமையான மன உளைச்சலில் இருந்தார் என்பதும், இதனால் தனது உடல் ஆரோக்கியத்தை அவர் சரியாக கவனித்துக் கொள்ள முடியாமல் போனதையும் ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள்.
மேலும் சில காலத்துக்கு அவருக்கு வந்த பட வாய்ப்புகளும் குறைந்துகொண்டே போயின. இதனைத் தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு தன்னை மீண்டும் பழையபடி ஆரோக்கியமாக கொண்டு வந்தார். இந்தப் பயணத்தை முன்னதாக ஒரு நீண்ட வீடியோவாக வெளியிட்டிருந்தார் சிம்பு. இந்த வீடியோ பலரை உணர்ச்சிவசப்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது முன்பை விட பலமடங்கு ஸ்டைலாக சிம்பு சமூக வலைதளத்தில் வலம் வருகிறார். புதிய ஹேர் ஸ்டைல் அசத்தல் காஸ்டியூம் என்று அனைவரின் கண்களையும் தன்மேல் பதியும் படி உலாவி வருகிறார் சிலம்பரசன்.
View this post on Instagram
தற்போது தனது அடுத்த படத்திற்காக தயாராகி வரும் சிலம்பரசன் தான் உடற்பயிற்சி செய்த வீடியோவை மீண்டும் ஒரு முறை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ அவரது ரசிகர்களைக் கவர்ந்து இதயங்களைக் குவித்து வருகிறது. மேலும் தன்னை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் சிம்பு கவனம் செலுத்துவது அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.