Siddharth : உங்களுக்கு பிடிக்கலனா நான் சாகமுடியாது...இந்தியன் 2 விமர்சனத்திற்கு சித்தார்த் பதில்
இந்தியன் 2 படத்தில் சித்தார்த் பேசிய 'சித்ரா அரவிந்தன் சோசியல் மீடியா' என்கிற வசன ட்ரோல் செய்யப்பட்டது குறித்து நடிகர் சித்தார்த் மனம் திறந்து பேசியுள்ளார்
சித்தார்த்
நடிகர் சித்தார்த் நடித்துள்ள மிஸ் யூ திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தனது சினிமா கரியர் பற்றி பல்வேறு விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். இந்தியன் 2 படத்திற்காக நடிகர் சித்தார்த் இணையத்தில் கடுமையாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் பற்றிய அவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது . இப்படத்தில் சித்ரா அரவிந்தன் சோசியல் மீடியா என்று சித்தார்த் பேசும் வசனம் மீம் மெட்டிரீயலாக மாறியது . இதுகுறித்து சித்தார்த் முதல்முறை வெளிப்படையாக பேசியுள்ளார்.
உங்களுக்கு பிடிக்கலனா சாக முடியாது
நிறைய பேர் என்கிட்ட இந்தியன் 2 படம் பத்தி பேசலாமானு கேக்குறாங்க. நாம சின்ன வயசுல இருந்து பார்த்த ஒரு பெரிய படம். அந்த படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்பு கிடைக்கிறது. 6 வருஷத்திற்கு பின் அந்த படம் ரிலீஸாகி ஓடவில்லை என்றால் அது என்னுடைய தப்பு இல்லை. அதற்காக அந்த படத்தில் நான் நடித்திருக்கவே கூடாது அந்த படமே எடுத்திருக்க கூடாதுனு சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல. சித்தா படத்தில் என் நடிப்பை பாராட்டுகிறீர்கள் ஆனால் இந்தியன் 2 படத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். என்னுடைய நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இதை நான் சொன்னால் என்னை திட்டுவார்கள். ஆமாம் உங்களுக்கு சித்ரா அரவிந்தன் சோசியல் மீடியா என்கிற வசனம் காமெடியாக இருந்தால் பரவாயில்லை. அந்த இடத்திற்கு பதிலாக வேற ஒரு வசனம் இருந்திருக்கலாம். அதுக்காக என்னோட நடிப்பை கேள்வி கேட்பது நியாயமில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நான் செத்திட முடியாது." என சித்தார்த் பேசினார்.
Siddharth on Indian 2, Chitra Aravindhan, that joke about ‘social media’, the unfairness of his performance being judged on the basis of a dialogue gone wrong…
— Sudhir Srinivasan (@sudhirsrinivasn) December 11, 2024
The full interview is here: https://t.co/lbk7j33CyE pic.twitter.com/QB6njVdZWk
மேலும் படிக்க : Pushpa 2 Collection : ஆறு நாளில் ஆயிரம் கோடி தொட்ட புஷ்பா 2...அடுத்த இலக்கு 2000 கோடி
Top 10 Tamil Movies : அரண்மனை முதல் அமரன் வரை... இந்த ஆண்டின் டாப் 10 படங்கள்...