மேலும் அறிய

ரஜினிக்காக அடிதடி சண்டை போட்டிருக்கேன்.. அவரோட வெறியன் நான்.. சரவணன் ஓபன் டாக்

நடிகர் சரவணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றி ரஜினிக்காக அடிதடி சண்டை போட்டிருப்பதாக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

பொண்டாட்டி ராஜ்ஜியம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன நடிகர் சரவணன் அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள சட்டமும் நீதியும் வெப் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் நடிகர் ரஜினிக்காக சிறுவயதில் சண்டை போட்டிருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

கடவுள் காப்பாத்துவார்

பார்வதி என்னை பாரடி, தாய் மனசு மாமியார் வீடு, அபிராமி உள்ளிட்ட பல படங்களில் நடிகர் சரவணன் ஹீரோவாக நடித்தார். இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் ஹீரோவாக வலம் வந்தார். இருப்பினும் பார்க்க அப்படியே விஜயகாந்த் போன்று உருவ அமைப்பு இருந்ததால் பட வாய்ப்புகள் குறைந்ததாக அவரே பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். அவரும் நானும் ஒன்னா இருக்கோமா என்று கூட யோசித்திருக்கிறேன். கடவுள் காப்பாத்துவார் என்று நம்பியிருந்தேன் என நடிகர் சரவணன் தெரிவித்தார். 

பருத்திவீரனில் பெயர் கிடைத்தது பணம் வரலை

நந்தா படத்தில் வில்லனாக ரீ என்ட்ரி தந்த சரவணன் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு சித்தப்பாவா மாறிவிட்டார். அந்த படத்தில் இவரது கதாப்பாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவரது சினிமா கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக பருத்திவீரன் இருந்தது. அவர் ஏற்று நடித்த சித்தப்பு கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. பருத்திவீரன் படம் பெயரை சம்பாதித்து காெடுத்த அளவிற்கு பணம் சம்பாதிக்கவில்லை. இன்று வரை அந்த படத்தில் நடித்ததற்கான பணம் வரலைங்க என்று மனம் நொந்து சரவணன் தெரிவித்திருக்கிறார். 

ரஜினியின் தீவிர ரசிகன்

நடிகர் சரவணன் சட்டமும் நீதியும் என்ற வெப் தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் அவரது காதாப்பாத்திரம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், இதுதொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் சிறு வயதில் இருந்தே ரஜினி வெறியன். அவர் படம் ரிலீஸ் ஆனால், முதல் நாளே தியேட்டரில் பார்த்துவிடுவேன். அவர் படத்தை பார்க்கலைனா தூக்கம் வராது. ரஜினிக்காக பலமுறை அடிதடி சண்டை போட்டிருக்கேன். பட டிக்கெட்டிற்காக ரசிகர்களின் தலைமேல் ஏறி  டிக்கெட் எடுத்து படத்தை பார்த்துள்ளேன் என அவர் உற்சாகமாக தெரிவித்தார். 

ரஜினிக்காக அடிதடி சண்டை

மேலும், துடிக்கும் கரங்கள் படத்தை தியேட்டரில் பார்த்தபோது ஒரு பக்கம் ரஜினி ரசிகர்களும், மறுபக்கம் ஜெய்சங்கர்  சார் ரசிகர்களும் ஆரவாரம் செய்தபோது, இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அடிதடி அளவுக்கு போய்விட்டது. அவரை பார்த்தாலே எனக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும் என்று சரவணன் தெரிவித்தார். பின்பு ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து பேசிய அவர், ரஜினி சார் கூட நடித்ததை பெருமையாக பார்க்கிறேன். என் வாழ்வில் சிறப்பான தருணம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ரஜினிக்கு சினிமாவில் பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். தற்போது ரஜினி குறித்து சரவணன் அளித்த பேட்டி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
ABP Premium

வீடியோ

அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி
14 நாட்கள் ஜெயில்! ARREST ஆன ஷிம்ஜிதா! போராட்டத்தில் குதித்த ஆண்கள்
4000 குழந்தைகள்... ARUN ICECREAM கின்னஸ் சாதனை சென்னையை மிரளவைத்த சம்பவம்
கோவையில் கொலைவெறி தாக்குதல்!போதை கும்பலிடம் சிக்கிய இளைஞர்பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
Skoda Kodiaq RS: சம்பவக்காரன் கம்மிங்.! ஸ்கோடாவின் முதல் மாடல் - சக்திவாய்ந்த இன்ஜின், கோடியாக் விலை, அம்சங்கள்
Skoda Kodiaq RS: சம்பவக்காரன் கம்மிங்.! ஸ்கோடாவின் முதல் மாடல் - சக்திவாய்ந்த இன்ஜின், கோடியாக் விலை, அம்சங்கள்
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Top 10 News Headlines: அடிக்கல் நாட்டிய ஸ்டாலின், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா ஒப்பந்தம், தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: அடிக்கல் நாட்டிய ஸ்டாலின், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா ஒப்பந்தம், தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Ration Card: சக்கரை ரேஷன் கார்டை அரிசி அட்டையாக மாற்றனுமா.? சட்டசபையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
சக்கரை ரேஷன் கார்டை அரிசி அட்டையாக மாற்றனுமா.? சட்டசபையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
Embed widget