சினிமாவில் களமிறங்கும் சந்தானத்தின் மகன்...என்னவா ஆகப்போறாரு தெரியுமா
தனது மகன் கூடிய விரைவில் இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரோமோஷனில் நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்

காமெடி கில்லாடி சந்தானம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொல்லு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சந்தானம். சிம்பு இயக்கிய மன்மதன் படத்தின் மூலம் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார். டைமிங்க் காமெடி , வெரைட்டி வெரைட்டியாக கலாய்ப்பது என கெளண்டமணி, வடிவேலுவுக்குப் பின் பிரபல காமெடியனாக வலம் வந்தார். கதையே இல்லாத படமாக இருந்தாலும் சந்தானம் இருந்தால் அந்த படம் ஹிட் என்கிற நிலை ஏற்பட்டது. எப்போது நாயகனுக்கு நண்பனாக நடித்து வந்த சந்தானம் தானே ஹீரோவாகலாம் என முடிவு செய்தார். கண்ணா லட்டு திண்ண ஆசையா , தில்லுக்கு துட்டு , ஏ 1 இவரது படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது சந்தானம் நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படமான டெவில்ஸ் டபுள் நெக்ஸ் லெவல் படம் மே 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்
'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது தனது மகன் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக சந்தானம் தெரிவித்துள்ளார்
சினிமாவிற்கு வரும் சந்தானத்தின் மகன்
" என்னுடைய குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். அது ஒருவகையில் நமக்கு பிளஸ்தான். ஒரு படம் பார்த்துவிட்டு கிரிஞ்சா இருக்கு பூமரா இருக்கு என்று சொல்லிவிவார்கள். என் மகன் தற்போது 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரி முடித்துவிட்டு இயக்குநராக ஆக வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்" என சந்தானம் தெரிவித்துள்ளார்
Santhanam’s son who is studying +2 can be seen soon Directing a film!!
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 14, 2025
pic.twitter.com/XzDd91Hr17





















