‛என் உயிரை எடுத்த ஆர்யா...’ மேடையில் வைத்து உண்மையை சொன்ன சந்தானம்!
‛உனக்கு இருக்கும் பாடிக்கு நீ அர்னால்டு மாதிரி நடிக்கலாம். நீ ஏன் கும்பகோணத்துல வந்து என்னோட காமெடி படத்துல நடிக்குற என்று கேட்டு இருக்கிறேன்’
Actor Santhanam about Arya : அர்னால்டு மாதிரி நடிக்கலாம்... ஏன் என்னோட காமெடி படத்துல நடிக்கிற... கலாய்த்த சந்தானம்
ஒரு படத்தில் ஹீரோக்களை முன்னிலை படுத்தி காட்டுவதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பவர்கள் அப்படத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்கள்.ஒரு சில நடிகர்களுக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கும் நல்ல ஒரு வேவ் லென்த் இருக்கும். நடிகர் சத்யராஜ் - கவுண்டமணி காம்பினேஷனை ரசிக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. அப்படி ஒரு காம்பினேஷன் தான் நடிகர் ஆர்யா - சந்தானம் ஜோடி.
சரியான காம்பினேஷன் :
நடிகர் ஆர்யா - சந்தானம் காம்பினேஷனில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க உள்ளிட்ட படங்கள் சரியான ஹிட் படங்கள். அவர்கள் இருவரும் படத்தில் ஒன்றாக நடிக்கிறார்கள் என்பதை காட்டிலும் இருவரும் மிக நல்ல நண்பர்கள்.
கேப்டன் படம் :
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷக்தி.எஸ்.ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா - ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கும் திரைப்படம் " கேப்டன்". இப்படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட தயாராகவுள்ளது. படத்தின் விளம்பர பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் இப்பட குழுவினர்.
வாய்ப்பு கிடைத்தால் ஆர்யாவோடு சேர்ந்து நடிப்பேன் :
ஒரு நிகழ்ச்சியின் போது நடிகர் ஆர்யாவின் ஆதரவாளராக நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய போது " பல இயக்குனர்கள் என்னை டபுள் ஹீரோ கதாபாத்திரங்களுக்கு, கெஸ்ட் ரோல் கதாபாத்திரங்களுக்கு எல்லாம் அழைத்தார்கள். ஆனால் அதை எதையும் நான் ஏற்பதில்லை. நான் ஒரு தனி ட்ராக்கில் நடித்து கொண்டு இருக்கிறேன். ஆனால் ஆர்யா "பாஸ் என்கிற பாஸ்கரன் 2 " அல்லது வேறு ஏதாவது படம் அவரோடு நடிக்க அழைத்தால் உடனே வந்து நடிக்கிறேன் என்றுள்ளேன். எனக்கு ஆர்யா மேல் அவ்வளவு அன்பு மற்றும் எனது நெருங்கிய நண்பர், நல்ல மனிதர். நான் ஒரு நகைச்சுவை நடிகனாக இருக்கும் போதே என்னை ஸ்விம்மிங், உடற்பயிற்சி, சைக்ளிங் செய் என்று என்னை உயிரெடுத்துள்ளார் ஆர்யா. எது செய்தாலும் ஹீரோ லுக் வேண்டும் என்று என்னை வற்புறுத்தி செய்யவைத்தவர். அவரோடு நடித்த படங்களில் எனக்கு சரிசமாக திரையை பகிர்ந்தவர் ஆர்யா. என்றைக்குமே அவருக்கு எனது அன்பும் ஆதரவும் நிச்சயம் இருக்கும். இப்படத்தின் மூல ஆர்யா தயாரிப்பாளராகவும் முன்னேறியுள்ளார். இப்படத்தை அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள்" என்றார் நடிகர் சந்தானம்.
அர்னால்டு மாதிரி நடிக்கலாமே:
மேலும் சந்தானம் பேசுகையில் " பாஸ் என்கிற பாஸ்கரன் படம் நடித்த போதே உனக்கு இருக்கும் பாடிக்கு நீ அர்னால்டு மாதிரி நடிக்கலாம். நீ ஏன் கும்பகோணத்துல வந்து என்னோட காமெடி படத்துல நடிக்குற என்று கேட்டு இருக்கிறேன். "கேப்டன்" படம் ஒரு ஏலியன் பற்றின ஆர்மி கதை என்று ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கியுள்ளார்கள். அதனால் அனைவருக்கும் சப்போர்ட் செய்யுங்கள். ரசிகர்கள் ஒரு புதுமையை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் இப்படம் நிச்சயம் வெற்றியடையும்" என்றார் நடிகர் சந்தானம்.