மேலும் அறிய

Vijay- Ajith: எப்படியாவது விஜய்யை ஜெயிக்கணும்ன்னு அஜித் சொன்னார்...சஞ்சீவ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

அஜித் ரொம்ப தைரியமானவர். யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாதவர். தனக்கு கிடைக்க வேண்டியது எனக்கு தான் கிடைக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

அஜித்தை சந்திக்க சென்ற போது, விஜய் பற்றி அவர் சொன்னது குறித்து அவரது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது. 

ஒரு வழியாக தீபாவளி முடிந்து விட்டது. பொதுவாக பண்டிகை காலம் என்றாலே என்னென்ன திரைப்படங்கள் வெளிவருகிறது என்பதே அனைவரது கேள்வியாக இருக்கும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு கார்த்தி நடித்த சர்தார், சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் படங்கள் வெளியானது. இதில் சர்தார் படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் ப்ரின்ஸ் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. 

Vijay- Ajith: எப்படியாவது விஜய்யை ஜெயிக்கணும்ன்னு அஜித் சொன்னார்...சஞ்சீவ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

இதனையடுத்து அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பொங்கல் பண்டிகையை நோக்கி திரும்பியுள்ளது. காரணம் 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய்- அஜித் படங்கள் மீண்டும் நேரடியாக மோதவுள்ளதால் இந்த முறை ஜெயிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

துணிவு vs வாரிசு

நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், படம் பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் பொங்கலுக்கு நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளதாலும் வாரிசு படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஜய்யை ஜெயிக்கணும் 

இதனிடையே விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் அளித்த நேர்காணல் ஒன்றில் அஜித் பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அஜித் ரொம்ப தைரியமானவர். யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாதவர். தனக்கு கிடைக்க வேண்டியது எனக்கு தான் கிடைக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். நானும் ஸ்ரீநாத்தும் ஷூட்டிங் ஒன்றில் அஜித்தை சந்திக்க சென்றோம். எங்களுக்கு ஜூஸ் கொடுத்து உபசரித்தார். நாங்கள் விஜய்யின் நண்பர்கள் என தெரிந்தும், என் வாழ்க்கையில ஒரே ஒரு குறிக்கோள் தான். 

எப்படியாவது உங்க ஃப்ரண்டை ஜெயிக்கணும். நான் அவரை தூக்கிப் போட்டு மேலே போயிருவேன் பாருங்க என சொன்னார். நாங்களும் சிரிச்சிட்டே சரின்னு தலையாட்டிட்டு வந்துட்டோம். அப்புறம் விஜய்கிட்ட சொன்னப்ப சூப்பர்ல. அப்படி சொல்றது ஒரு பெரிய விஷயம் தானே என அவரும் சொன்னார் என்று சஞ்சீவ் கூறியுள்ளார். திரைக்கு முன்னால் மோதும் விஜய் - அஜித், திரைக்கு பின்னால் நல்ல நட்புடன் தான் பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget