(Source: ECI/ABP News/ABP Majha)
Saif Ali Khan: பிரபலங்கள் எல்லா நேரத்திலும் நல்லவராக இருக்க வேண்டுமா? - நடிகர் சைஃப் அலிகான் சொல்வது என்ன?
தனக்கு ரகசியமாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு இருப்பதாகவும் அவ்வப்போது அதை பயன்படுத்தி வருவதாகவும் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தெரிவித்துள்ளார்.
சைஃப் அலி கான்
புகழ்பெற்ற பாலிவுட் காதல் ஜோடிகளாக இருந்து திருமண தம்பதிகளாக மாறியவர்கள் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர். நடிகர் சைஃப் அலிகான் தனது முதல் மனைவியான அம்ரிதா சிங் கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 13 ஆண்டுகால தனது முதல் திருமண வாழ்க்கையை முடித்த சைஃப் அலிகான் பாலிவுட் நடிகை கரீனா கபூருடன் மீண்டும் காதலில் விழுந்தார். 2007-ஆம் முதல் டேட் செய்து வந்த இந்த ஜோடி கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியினருக்கு தைமூர் அலிகான் மற்றும் ஜே அலிகான் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
நடிகர் சைஃப் அலிகான் தற்போது ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள தேவரா படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு பிரபாஸ் நடித்து வெளியான ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் இருந்து பெரும்பாலும் ஒதுங்கியே இருக்கும் சைஃப் அலி கான் தனக்கு ரகசியமாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரகசியமாக இன்ஸ்டாகிராம் பயண்படுத்துவேன்
நிகழ்ச்சியில் பேசிய சைஃப் அலி கான் ‘ எனக்கு ரகசியமாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு இருக்கிறது. நான் பெரிதாக அதை எஞ்சாய் பண்ணவில்லை என்றாலும் அவ்வப்போது அதை பயன்படுத்துவேன் . அதேபோல் ஒவ்வொரு முறையும் அதை பயண்படுத்தும் போதும் இந்த கணக்கை டிலீட் செய்துவிட வேண்டும் என்று தான் நினைப்பேன் . ஆனால் நாம் மறுபடியும் அதே கணக்கை தான் பயன்படுத்திக் கொண்டு இருப்பேன் . அடுத்தவர்களைப் பற்றி பதிவிடுவதில் எனக்கு எந்த வித விருப்பமும் இல்லை. நல்லவேளையாக எந்த பொருளையும் விளம்பரப் படுத்த என்னை யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. ஏனென்றால் நான் சமூக வலைதளத்தில் இல்லை என்று அவர்களுக்கு தெரியும் . இதனால் நான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் ”இப்போது எல்லாம் எங்கு பார்த்தாலும் பிரபலங்களை புகைப்படக் காரர்கள் ஃபோட்டோ எடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். தெரியாமல் அந்த புகைப்படக் காரர் கீழ் விழுந்துவிட அவரை அந்த பிரபலம் தூக்கிவிடும் படியாக வீடியோக்கள் வெளியாகின்றன. இந்த வீடியோக்களை வைத்து அந்த பிரபலம் நல்லவரா கெட்டவரா என்று மக்கள் கணக்கிடுகிறார்கள். எல்லா நேரமும் எல்லாரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்