RJ Balaji: நான்தான் நாளைய விவேகானந்தர்.. ஆர்.ஜே.பாலாஜி பெருமைப்பட்ட தருணம் எது தெரியுமா?
RJ Balaji : நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ரன் பேபி ரன் படத்துக்குப் பின் நடித்துள்ள படம் “சிங்கப்பூர் சலூன்” . கோகுல் இயக்கியுள்ள இந்த படம் நாளை (ஜனவரி 25) தியேட்டரில் வெளியாகிறது.
என் பையனின் நடவடிக்கைகளை பார்க்கும்போது நான் தான் அடுத்த விவேகானந்தனர் என நினைக்கத் தோன்றியது என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
காமெடி கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ரன் பேபி ரன் படத்துக்குப் பின் நடித்துள்ள படம் “சிங்கப்பூர் சலூன்” . கோகுல் இயக்கியுள்ள இந்த படம் நாளை (ஜனவரி 25) தியேட்டரில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ப்ரோமோஷன் பணிகளில் ஆர்.ஜே.பாலாஜி ஈடுபட்டு வருகிறார்.இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தன்னுடைய மகனால் தான் பெருமைப்பட்ட தருணம் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
அதில், பெண் சுதந்திரம் பற்றி பேசும்போது, “என் வீட்டில் பெண்கள் செய்வது என்று குறிப்பிடப்படும் வீட்டை பெருக்குவது, பாத்திரம் கழுவுவது, சமையல் என குறிப்பிட்டப்பட்ட விஷயங்களை என் தாத்தாவை தொடர்ந்து நானும் செய்தேன். அதனால் சின்ன வயதில் இதெல்லாம் ஆண்கள்,பெண்கள் செய்ய வேண்டிய வேலை என பிரித்து பார்த்ததில்லை. சினிமாவில் பெண்ணடிமைத்தனம் பற்றிய விஷயங்கள் முரணாக உள்ளது.
ரொம்ப வருஷம் முன்னாடி ஒரு விஷயம் நான் சொன்னேன். என் முதல் பையனோட எல்கேஜி அல்லது யுகேஜியின் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அவனின் ஆசிரியை வந்து என்னிடம், ‘பிங்க் கலர் பொதுவாக பசங்க போட மாட்டாங்க. ஆனால் உங்க பையன் போட்டு வந்ததுல இருந்து எல்லாரும் போடுறாங்க’ என சொன்னார். அதுமட்டுமல்லாமல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, அப்செட் ஆக இருந்தாலோ என் பையன் அழுவான். இதனைப் பார்த்து கூட படிப்பவர்கள், ‘என்ன பசங்க எல்லாரும் அழமாட்டாங்க.. நீ ஏன் அழுவுற?’ என சொல்லியுள்ளார்கள். அதற்கு, ‘இல்லையே. யாரு அடிச்சாலும், யாரு வலிச்சாலும் அழலாம். சோகமா இருந்தாலும் அழலாம்’ என எங்க அப்பா சொல்லியிருக்காரு. அவர் வீட்டுல அழுறதை பார்த்திருக்கேன்’ என எனது மகன் சொல்லியிருக்கான். இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்துவிட்டு, ‘ஆஹா..நான் என் குழந்தையை எப்படி எல்லாம் வளர்த்திருக்கேன். நான் தான் நாளைய விவேகானந்தர்’ என பெருமை கொண்டு விட்டு என் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.
அங்க அவனோட அண்ணன் பையன் ஏதோ விளையாடிட்டு இருந்தவன் திடீர்னு அழுதான். உடனே அங்க வந்த அவனோட அப்பா, ‘நிறுத்து. நீ என்ன பொண்ணா? .. ஏன் பொண்ணு மாதிரி அழுவுற?’ என கேட்டார். இதைக் கேட்டதும் எனக்கு இதயமே நின்று விட்டது. ஒரு 4 வயசுல அந்த பையனுக்கு அப்படி சொல்லும்போது, ஒரு 10 வருஷம் கழிச்சி அனிமல் மாதிரி படம் வரும்போது அதனை ரசிக்கிறான்.இதைப் பற்றி அம்மா, அப்பா பேச சரியான மீடியம் இல்லை. ஒரு பற்றி பேசி வீடியோ போட்டீங்கன்னா 4 வருசம் கழிச்சி 13 ஆயிரம் பேர் தான் பார்த்திருப்பார்கள்.அந்த அளவுக்கு தான் இருக்கிறது” என தெரிவித்தார்.