“என்னை நல்லா ஏத்திவிட்டாங்க... வில்லனா நடிக்க சொன்னாங்க“ - ரஜினிகாந்த் பகிர்ந்த சுவாரஸ்யம்
”நான் கண்டக்டரா இருக்கும் பொழுது நான் 25 டிராமாக்கள்ல நடிச்சேன்.”
இந்திய திரையுலகமே ‘தலைவா’ என கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் மேடைப்பேச்சுகளில் அசத்தலாக பேசக்கூடியவர். அந்த வகையில் அவர் சில வருடங்களுக்கு முன்னதாக நடிகர்கள் பங்கேற்ற மேடை ஒன்றில் பேசிய அவர் தனது வசீகர பேச்சால் நடிகர்களையே கவர்ந்துவிட்டார்.
View this post on Instagram
ரஜினிகாந்த் பேசியதாவது :
” 1979 சிவாஜி சார் அசோக சக்கரவர்த்தி டிராமா இங்க பண்ணினாங்க. அப்போ நான் ஸ்கூட்டர் எடுத்துக்கிட்டு இங்க வந்தேன். ஆனால் என்னை உள்ளே விடவே இல்லை. அதன் பிறகு இதுதான் ரஜினினு அறிமுகம் செய்து வச்சு உள்ளே அனுப்பினாங்க. அப்போ உள்ளே இடமே இல்லை ஒரு ஓரமா நின்னுதான் பார்த்தேன். நாடக மேடைகள்தான் எனக்கு தாய். நான் கண்டக்டரா இருக்கும் பொழுது நான் 25 டிராமாக்கள்ல நடிச்சேன். அந்த சமயத்துல எனது நண்பர்கள் , சக நடத்துனர்கள் எல்லோரும் , நீ ஏன் சினிமாவுக்கு போகக்கூடாது மிகப்பெரிய வில்லனா வருவ அப்படினு ஏத்திவிட்டாங்க. நான் ஒரு நடத்துனர் எப்படி போய் சான்ஸ் கேட்க முடியும் , நான் அழகா வேற இருக்க மாட்டேன்... அதன் பிறகு ஒரு நிறுவனத்துல போய் படிச்சு , அதுல ஒரு சான்றிதழ் வாங்கி வச்சுக்கிட்டு அதன் பிறகு வாய்ப்பு தேடினேன். நாடகத்துல பாடுறது, ஆடுறது, நடிக்குறது, நிக்குறது என எல்லாமே சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா பணம் சம்பாதிக்க சொல்லிக்கொடுக்கவே இல்லை. என்ன பண்ணுறது அது கலைஞர்களுக்கு தலை எழுத்து. சம்பாதித்தால் கூட அதை காப்பாற்றிக்கொள்ள தெரியாது. பொழுதுபோக்கா இருந்து பிழைப்பா மாறும் இரண்டே விஷயம் ஒன்னு பொழுதுபோக்கு , மற்றொன்று கலை. இந்த பொழப்புல இருக்குறவங்களுக்கு பணம் இருந்தா பொழுது விடியும் , பணம் இல்லைனா பொழுது விடியுறதே கஷ்டம். உடம்புக்கு வயசாகாமல் யாராலும் தடுக்க முடியாது. ஆனால் மனசுக்கு வயதாகாமல் நாம தடுக்கலாம்.” என்றார் ரஜினி.