Oorkavalan: மனோபாலா இயக்கத்தில் ரஜினி.. ரசிக்க வைத்த ராதிகா.. ஊர்க்காவலன் படம் ரிலீசாகி 26 வருஷமாச்சு..!
மறைந்த இயக்குநர் மனோபாலா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “ஊர்க்காவலன்” திரைப்படம் வெளியாகி இன்றோடு 36 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
மறைந்த இயக்குநர் மனோபாலா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “ஊர்க்காவலன்” திரைப்படம் வெளியாகி இன்றோடு 36 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
மனோபாலா இயக்கத்தில் ரஜினிகாந்த்
1987 ஆம் அனடு வெளியான ஊர்க்காவலன் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ராதிகா, பாண்டியன், ரகுவரன், சித்ரா, வெண்ணிற அடை மூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இசையமைத்த இப்படத்தை சத்யா மூவிஸ் தயாரிக்க மறைந்த இயக்குநர் மனோபாலா ஊர்க்காவலன் படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெறா விட்டாலும், விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றார் ஊர்க்காவலன்.
படத்தின் கதை
ரஜினிகாந்த தன் சகோதரனின் கொலைக்கு நீதி கேட்டு போராடுவதே ஊர்க்காவலன் படத்தின் ஒன்லைன் ஸ்டோரியாகும். மாணிக்கம் (மனோஜ் கிருஷ்ணா) பண்ணையாரின் மகள் மல்லிகாவை காதலிக்கிறார். மல்லிகாவின் திருமணம் துரையுடன் (ரகுவரனுடன்) நிச்சயிக்கப்பட்டது, ஆனால் அவள் மறுத்து மாணிக்கத்தை காதலிப்பதாக தெரிவிக்கிறார். இப்படியான சூழலில் மாணிக்கத்திற்கும் மல்லிகாவிற்கும் காங்கேயன் (ரஜினிகாந்த்) கிராமத்தில் திருமணம் செய்து வைக்கிறான்.
அதேசமயம் ஊரின் சுவாமியாக கொண்டாடப்படும் தனக்கு எதிரான தெய்வீக சக்தி இருப்பதாக காட்டி, கிராம மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி மாணிக்கத்தைக் கொன்றுவிடுகிறார் துரை. ஆனால் மல்லிகாவை விதவையாக பார்க்க விரும்பாத காங்கேயன், அவளது பால்ய நண்பனான வண்டி ஓட்டுனரான பாண்டியனுடன் அவளை மீண்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறான். இதனை தொடர்ந்து துரை மீண்டும் தலையிட்டு மூடநம்பிக்கையை மீண்டும் பயன்படுத்தத் தொடங்குகிறார், இதில் காங்கேயன் தனது சகோதரனின் மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையைப் பற்றி தெரிந்துகொண்டு என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை.
காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம்
ஊர்க்காவலன் படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் திரையில் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படும். ஆர்ப்பாட்டமில்லாத ரஜினியை இதில் கண்டதால் பெரும்பாலான ரசிகர்கள் குவிந்தனர். இப்படியான நிலையில் படத்தில் பல சுவாரஸ்யமான காட்சிகள் இடம் பெற்றது. குறிப்பாக அதிகாலை ரஜினி எழுப்பி சாப்பிட சொல்லும் காட்சி என அடுக்கிக்கொண்டே போகலாம். மாசி மாதம் தான் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. காட்சிக்கு காட்சி கைதட்டல் கிடைத்தது. ஆக மொத்தத்தில் எல்லைச்சாமி (ஊர்க்காவலன்) இல்லாமல் அந்த படமே இல்லை என்றே சொல்லலாம்.