மேலும் அறிய

Rajinikanth: 'உன் வாழ்க்கை உன் கையில்’ ... புத்தாண்டு வாழ்த்து சொல்ல நேரில் வந்த ரஜினி.. உற்சாகமான ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

அந்த வகையில்  உலகின் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்தது.  இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2023 புத்தாண்டு பிறந்தது.   அதைதொடர்ந்து, ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்தியாவிற்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை வரவேற்றன. இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. 

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. ஆட்டம் பாட்டம் என வயது வித்தியாசமில்லாமல் வீதிகளில் மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கோயில்களில் சிறப்பு வழிபாடு, அரசியல், திரைப்பிரபலங்களின் வாழ்த்துகள் என புத்தாண்டு ஆரவாரமாக சென்று கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியிலும் போட்டிப்போட்டுக் கொண்டு புதுப்படங்கள் ஒளிப்பரப்பட்டு வருகிறது. 

இதனிடையே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், நள்ளிரவு 12 மணிக்கே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். அவர் தனது பதிவில் உன் வாழ்க்கை உன் கையில் என்ற ஹேஸ்டேக்குடன் அதனை பதிவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே ரஜினியை காண அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். 

அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து, வணக்கம் சொல்லி, முத்தங்களை பறக்கவிட்டு தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

விரைவில் ஜெயிலர் அப்டேட்?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்  உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு முத்துவேல் பாண்டியன் என்ற ரஜினியின் கேரக்டர் பெயர் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஜெயிலர் வீடியோவோடு புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்திருந்தது. கோடை விடுமுறையில் படம் வெளியாகலாம் என கூறப்படும் நிலையில் இனி அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK:
TVK: "ஆபாச புலம்பல்களை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால்.." உதயநிதிக்கு தவெக வார்னிங்..!
"ஆறே மாசம் எல்லாம் நாசம்: மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே!" - ஸ்டாலின் கடும் சாடல்!
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
Thirumavalavan:
Thirumavalavan: "இடைக்காலத் தீர்ப்பால் பதற்றம்.." மதுரை அமைதிப் பேரணியில் பங்கேற்கும் திருமா!
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Embed widget