Rajinikanth on Mahaan: மகான் படத்தை பார்த்துவிட்டு போன் செய்து பாராட்டிய ரஜினி! நெகிழ்ந்து போன கார்த்திக் சுப்பராஜ்
ரஜினிகாந்த்திற்கு படம் பிடித்திருந்ததாகவும், போனில் பராட்டியதற்கு நன்றி தெரிவித்தும் நெகிழ்ந்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் ஆகியோரது நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் படம் ‘மஹான்’(Mahaan). கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனம் வந்திருக்கும் நிலையில், துருவ் விக்ரமின் திறமையான நடிப்பிற்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த்(Rajinikanth), படத்தை பாராட்டி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு போன் செய்திருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் கார்த்திக், “அருமையான படம்... சிறப்பான நடிப்பு... ப்ரில்லியண்ட்” என ரஜினி பாராட்டியதாக தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த்திற்கு படம் பிடித்திருந்ததாகவும், போன் செய்து பராட்டியதற்கு நன்றி தெரிவித்தும் நெகிழ்ந்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக்.
"Excellent movie ... Superb Performances .... Brilliant "
— karthik subbaraj (@karthiksubbaraj) February 11, 2022
Yes.... Thalaivar loveeeed #Mahaan 😍😍
Thanks for your call Thalaivaaa..... 🙏🏼🙏🏼
We are Elated!!#ThalaivarLovedMahaan#MahaanOnPrime #MahaanStreamingNow pic.twitter.com/xTBjZCI3Oe
மேலும், துருவிற்கு பிடித்த கோலிவுட் நடிகர் யார் என்பது தொடர்பான பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 2019-ம் ஆண்டு கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட துருவ் விக்ரம், கல்லூரி மாணவ மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்வியில், “நீங்க தல ரசிகரா, தளபதி ரசிகரா?” என கேட்க, துருவ் அதற்கு பதிலளித்திருக்கிறார். “உண்மையை சொல்லனும்னா, நான் தளபதி ரசிகன்” என அவர் சொல்ல, அரங்கமே அதிர்ந்தது.
விக்ரம் - துருவ் காம்போவில் உருவான மஹான் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்