பொன்னியின் செல்வன் படத்தில் நானும் ஒரு அங்கம்... இது இன்னொரு ரஹ்மானின் பெருமிதம்!
Bollywood Entry : பாலிவுட்டின் மிகவும் பிரபலமான இயக்குனரான விகாஸ் பாஹ்லின் இயக்கத்தில் கணபத் திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் என்றாலும் மிகவும் பயனுள்ள கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஹ்மான்.
Actor Rahman: நான் ரொம்ப லக்கி...கணபத் மூலம் பாலிவுட் என்ட்ரி...சந்தோஷத்தில் ரஹ்மான்
எந்த ஒரு கதாபாத்திரத்தையும் வெகு சிறப்பாக நடிக்க கூடிய நடிகர்களில் ஒருவர் ரஹ்மான். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் சிறப்பாக நடித்துள்ளார். அவர் எந்த படத்தில் நடித்திருந்தாலும் அவரின் தனித்துவமான நடிப்பு நிச்சயம் பேசப்படும். இவர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் படங்கள்:
நடிகர் ரஹ்மான் மிகவும் பிஸியாக இருக்கிறார். வரிசையாக ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். எதிரே, வைரஸ், சமாரா, ப்ளூ, கணபத் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரஹ்மான் தற்போது "கணபத்" திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார்.
பாலிவுட் என்ட்ரி:
பாலிவுட்டின் மிகவும் பிரபலமான இயக்குனரான விகாஸ் பாஹ்லின் இயக்கத்தில் கணபத் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ரஹ்மான். இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பெரிதாக எதுவும் வெளிப்படுத்தாமல் மேலோட்டமாக சில தகவல்களை மட்டுமே பகிர்ந்துள்ளார். இப்படம் ஒரு சுவாரஸ்யமான திரை கதை கொண்டுள்ள படம். இதில் டைகர் ஷெராஃப், க்ரித்தி சனோன் மற்றும் கௌஹர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டைகருக்கு ஜோடியாக க்ரிதி சனோன் நடிக்க ரஹ்மானுக்கு ஜோடியாக கௌஹர் கான் நடித்துள்ளார். ரஹ்மானின் தந்தையாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இது ஒரு கெஸ்ட் ரோல் என்றாலும் மிகவும் முக்கியமான பயனுள்ள கதாபாத்திரம். லண்டன், மும்பை, லடாக் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தான் நடிப்பதை ஒரு அதிர்ஷ்டமாக உணர்கிறார்.
பொன்னியின் செல்வன்:
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உத்தமா சோழன் மதுராந்தகன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஹ்மான். தான் அந்த காவிய கதையில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார். மேலும் அவர் கூறுகையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, ஜெயராம் என ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்திருக்கும் இந்த காவிய திரைப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ் இண்டஸ்ட்ரியின் மிக பெரிய முக்கியமான திரைப்படங்களில் இதும் ஒன்று. இதில் ஒருவரின் கதாபாத்திரத்தின் நீளம் முக்கியமானதல்ல.
இதில் ஒவ்வொருவரும் "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் ஒரு அங்கம். இப்படம் குறைந்தது 30-40 வருடங்களுக்கு யாரும் இதை ரீமேக் செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. பொன்னியின் செல்வன் கதையை புத்தம் மூலம் படிக்க முடியாதவர்களுக்கு இந்த படம் காட்சியின் மூலம் பிரதிபலிக்கும். இப்படம் பாகுபலியை விடவும் மிகவும் பெரியது. இதில் எத்தனை கதாபாத்திரங்கள் உள்ளன. இது ஒருவர் பற்றின கதை அல்ல. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு பிறகும் ஒரு கதை உள்ளது. அதை மணிரத்னம் சார் மிகவும் அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார். இந்த காவிய நாவலுக்கு நியாயம் செய்துள்ளார். இதில் நானும் ஒரு பங்கு வகிறேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று முந்தைய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார் நடிகர் ரஹ்மான்.