Meena Love Story: திருமணமான நடிகர் மீது காதல் மயக்கத்தில் சுற்றிய மீனா! பிளே பாய் என தெரிந்ததும் கழற்றிவிட்ட ஸ்டோரி தெரியுமா!
திருமணமான நடிகர் மீது கொள்ளை ஆசை வைத்திருந்த பிரபல நடிகை மீனா, அவர் ஒரு பிளே பாய் என்று தெரிந்து அவரை கழற்றிவிட்ட பழைய காதல் கதை மீண்டும் சமூக வலைதளயத்தை சுற்றி வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் தான் மீனா. ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்துள்ளார். அதிலேயும் சிவாஜி கணேசன் படத்தில் அறிமுகமாகி, ரஜினிகாந்த் படம் மூலம் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு தான் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். ஒரு புதிய கதை தான் மீனா ஹீரோயினாக நடித்த முதல் படம். அழகின் வடிவமாக இருந்த மீனாவிற்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரவே பிஸியான நடிகையாக வலம் வந்தார்.
ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பாக்யராஜ், அர்ஜூன், கமல் ஹாசன் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதிலேயும் அவ்வை சண்முகி, முத்து, எஜமான், நாட்டாமை, வானத்தை போல, சிட்டிசன் என்று சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பெரும்பாலும் சர்ச்சையில் சிக்காத நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
பெற்றோர் பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளைக்கு தான் கழுத்தையும் நீட்டினார். ஆனால், சினிமாவில் இவர் முன்னணி நாயகியாக நடித்துக் கொண்டிருந்த போது திருமணமான நடிகரை காதலித்து கழட்டி விட்டதாக ஒரு கிசுகிசு வலம் வந்தது. அந்த நடிகர் வேறு யாருமில்லை. அவர் தான் டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான பிரபு தேவா.
மீனா மற்றும் பிரபு தேவா இருவரும் டபுல்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் போது பிரபு தேவாவை பார்த்து மயங்கியுள்ளார் மீனா. பின்னர் அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். அப்போதெல்லாம் பிரபு தேவாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. இது குறித்து தெரிந்தும் மீனா அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், மீனாவின் ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் பிரபு தேவா ஒரு பிளே பாய் என்று அவரின் லீலைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட, அச்சச்சோ தன் வாழ்க்கை தான் முக்கியம் என உஷாரான மீனா பிரபு தேவாவைப் கழற்றிவிட்டு நைசாக எஸ்கேப் ஆயிருக்கிறார். காதலை முறித்து கொண்டாடும் இருவரும் தற்போது வரை நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படி ஒரு கிசு கிசு பல காலமாக சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

