Livingston: கிறிஸ்துவ மதத்தில் இருந்து மாறியது ஏன்? - நடிகர் லிவிங்ஸ்டன் கொடுத்த விளக்கம் - கிளம்பிய சர்ச்சை
இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
கிறிஸ்தவ மதத்தில் இருந்து தான் மதம் மாறியதாக நடிகர் லிவிங்ஸ்டன் தெரிவித்த கருத்து இணையத்தில் கடும் சர்ச்சையை சந்தித்துள்ளது.
இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து 14 வருடங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர் 1996 ஆம் ஆண்டு வெளியான சுந்தர புருஷன் படத்தில் ஹீரோவாக எண்ட்ரீ கொடுத்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன்பின்னர் விரலுக்கேத்த வீக்கம், சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்த அவர் துணை கதாபாத்திரங்களில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், திரைக்கதையாசிரியர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பல துறைகளிலும் கெத்து காட்டிய அவர், சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார். விஜய், விஜயகாந்த், அஜித், பிரசாந்த், ஜெயம் ரவி, தனுஷ்,கருணாஸ் உள்ளிட்ட பல ஹீரோக்களின் படங்களிலும் லிவிங்ஸ்டன் நடித்துள்ளார்.
இவரது மூத்த மகள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் லிவிங்ஸ்டன் பேசிய ஒரு நேர்காணல் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பேசும் அவர், தனது மதம் மாற்றம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி விட்டதாக தகவல் பரவிய நிலையில் லிவிங்ஸ்டன் தரப்பில் எந்த விளக்கமும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அந்த நேர்காணலில் பேசும் அவர், “கிறிஸ்தவராக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. அதனால் நான் இந்து மதத்துக்கு மாறி விட்டேன். இப்போது நான் கிருஷ்ணருடைய பக்தர். ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் சேர்ந்து விட்டேன்” நெற்றியில் வைத்திருக்கும் பொட்டு கூட கிருஷ்ணருடைய அமைப்பில் உள்ளது” தான் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. பலரும் லிவிங்ஸ்டனுக்கு தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். எந்த மதத்துக்கு வேண்டுமானாலும் மாறும் உரிமை நம் அனைவருக்கும் உள்ள நிலையில், அதற்காக மற்ற மதங்களை பற்றி தவறான கருத்தை பேசக்கூடாது என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் லிவிங்ஸ்டன் பேசிய அந்த நேர்காணல் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியாகி விட்டது. ஆனால் அது இப்போது தான் ட்ரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Chennai Metro Train: நாளை மெட்ரோவில் போறீங்களா? ரூ.5 தான் கட்டணம் - சென்னை மெட்ரோவில் அதிரடி ஆஃபர்!