Kishore: கேவலமா தமிழ் மொழியில் பேசினேன்.. நடிகர் கிஷோர் ஏன் அப்படி சொன்னார்?
பொல்லாதவன் படத்தில் தமிழ் மொழியில் நான் பேசியதை கேட்டால் தனக்கே சிரிப்பாக வருகிறது என்று நடிகர் கிஷோர் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கிஷோர். கர்நாடகாவைப் பூர்வீகமாக கொண்டவர் இவர். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பொல்லாதவன் படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் இவர் நடித்த செல்வம் கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.
கிஷோர்:
பின்னர், தொடர்ந்து தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். ரஜினி, அஜித், சிம்பு, விஷால், விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக உருவெடுத்துள்ள கிஷோருக்கு பொல்லாதவன் படத்தின்போது தமிழ் மொழியில் சரளமாக பேசவோ, எழுதவோ வராது. இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
வெற்றிமாறன் சொன்னது என்ன?
வெற்றிமாறன் ஒரு தடவை போன் பண்ணி சொன்னாரு. எங்கேயோ படம் பாத்தாராம். மொழி தெரியாத ஒருத்தன் வந்து தப்பு தப்பா பேசுனாலும் ஜனங்களுக்கு பிடிச்சுருச்சு. அதுவரைக்கும் நான் டப்பிங் கஷ்டப்பட்டு பண்ணேன். 13 நாள் டப்பிங் பண்ணேன். வெற்றிமாறன் தான் அந்த ரோலுக்கு டப்பிங் பேச வேண்டியது. ஆனால், அவருக்கு நேரம் கிடைக்கல.
ரிலீஸ் எல்லாம் பிக்ஸ் ஆகிடுச்சு. எடிட்டிங் போயிட்ருந்தது. பாட்டு எல்லாம் ஷுட் பண்ண வேண்டியிருந்தது. அதுக்கு நடுவுல அவரால டப்பிங் பண்ண முடியல. நான் பண்ணதை வச்சு கொஞ்சம் அங்க புரியல.
எனக்கே சிரிப்பா வரும்:
சில இடத்துல தெளிவா பேசிட சொல்லுங்கனு கிஷோர் குரலே வச்சுக்கலாம்னு சொல்லிருந்தார். அதுக்கு விக்ரம் வெற்றியோட அசோசியோட் டைரக்டர், அப்புறம் மணிகண்டன் சவுண்ட் ஜென் இருந்தாரு. இவங்க இரண்டு பேரும் கிஷோர் வாய்ஸ் ப்ரெஷ்ஷா இருக்கு இதை வச்சுக்கலாம்னு சொன்னாங்க.
கடைசியாக கொஞ்சம் தெளிவா பேசிவிட்டோம். அப்போ எல்லாம் சிரிச்சுட்டே இருப்போம். நான் பேசுறதை கேட்டா எனக்கே சிரிப்பா வரும். அவ்வளவு கேவலமா பேசுவேன் தமிழ்மொழியில.
இவ்வாறு அவர் கூறியிருப்பார்.
வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தில் தனுஷ், கிஷோர், டேனியல் பாலாஜி, பவன் என அனைவரது நடிப்பும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது.
இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் படத்தில் தவிர்க்க முடியாத நடிகராக கிஷோர் மாறினார். ஆடுகளம் படத்தில் துரை கதாபாத்திரத்திலும், விசாரணையில் ஆடிட்டராகவும், வட சென்னையில் செந்திலாகவும், விடுதலையில் கேகே கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.
பொல்லாதவன், வெண்ணிலா கபடி குழு, வம்சம், ஆடுகளம், ஹரிதாஸ், விசாரணை, கபாலி, வடசென்னை, சார்பட்டா. பொன்னியின் செல்வன், வேட்டையன், விடுதலை 2 படங்கள் கிஷோர் தமிழில் நடித்ததில் முக்கியமான படங்கள் ஆகும். தமிழில் கடைசியாக கலியுகம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.





















