நாவலை அப்படியே பிரதிபலிக்குமா பொன்னியின் செல்வன் படம்? - நடிகர் கிஷோர் சொன்ன தகவல்!
பொன்னியின் செல்வன் நாவலை நிறைய பேர் படித்திருக்கிறார்கள் . அதனால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும்.
கிஷோர் :
தமிழ் , தெலுங்கு , கன்னடம் , இந்தி உள்ளிட்ட பன்மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் கிஷோர் . கொடுக்கும் கதாபாத்திரம் வில்லனாக இருந்தாலும் சரி , ஹீரோவாக இருந்தாலும் சரி அதற்கு அப்படியே நியாயம் செய்யக்கூடியவர் கிஷோர் . கிஷோர் கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும் நடிக்கும் அனைத்து படங்களிலுமே சொந்த குரலில் டப்பிங் செய்வதுதான் கூடுதல் பிளஸ். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கைலா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கிஷோரும் முக்கிய வேடத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
KISHORE as RAVIDHASAN.
— PONNIYIN SELVAN ⚔️ (@son_of_cauvery) May 1, 2021
Head of Villian gang👽.#PonniyinSelvan #Maniratnam#Karthi #Vikram #Trisha #AishwaryaRai #JayamRavi #Sarathkumar @arrahman @hasinimani @LycaProductions pic.twitter.com/qWGBeeQeOm
பொன்னியின் செல்வன் பற்றி கிஷோர் :
பொன்னியின் செல்வன் படத்தில் கிஷோருக்கு முதன் முதலில் அவர் நடிக்கும் கேரக்டர் குறித்தான வரைபடம் ஒன்றை கொடுத்தாராம் மணிரத்தினம் .அதனை தற்போதும் பத்திரமாக வைத்திருப்பதாக கூறுகிறார் கிஷோர். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறார்கள் . அதனால் எல்லோருக்கும் சிறு சிறு சீன்ஸை மணிரத்தினம் ஒதுக்கியிருக்கிறார் என்கிறார் கிஷோர்.தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கனவு படம் பொன்னியின் செல்வன். ஆனால் நாவலை அப்படியே பிரதிபலிக்குமா என எனக்கு தெரியாது. ஏனென்றால் நாவலை படிக்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாக படித்திருப்பார்கள். இது இயக்குநரின் பார்வையில் இருக்கும். பெருவாரியான ரசிகர்களை நிறைவு செய்துவிட்டால் போதும்.பொன்னியின் செல்வன் நாவலை நிறைய பேர் படித்திருக்கிறார்கள் . அதனால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். எனக்கு கார்த்தி , ரியாஸ், தியேட்டர் நடிகர் வினய் இவர்களுடன் அதிக காட்சிகளில் கிஷோர் நடித்திருக்கிறாராம். இது தவிர கிளைமேக்ஸில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் சில காட்சிகளில் கிஷோர் நடித்ததாக தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram