Actor Kavin: காதலை சொன்னேன்... டீச்சர் அடிச்சிட்டாங்க.. கவினின் முதல் காதல் கதை என்னன்னு தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பான தாயுமானவன், சரவணன் மீனாட்சி-2 சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா? படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.
நடிகர் கவின் தன்னுடைய முதல் காதல் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான தாயுமானவன், சரவணன் மீனாட்சி-2 சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா? படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்ற கவின் அந்த சீசனில் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி கவினுக்கு ஒருபடி அதிகமாகவே ரசிகர்களை சேர்த்தது. இந்நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளரும், நடிகையுமான லாஸ்லியாவுடன் நெருங்கி பழகியது சர்ச்சையாக மாறியது.
பின்னர் லிஃப்ட் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கவின் நடிப்பில் சமீபத்தில் “டாடா” படம் வெளியானது. கைக்குழந்தையை தனி ஆளாக வளர்க்கும் அப்பாவாக அவர் நடித்த கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் தொடங்கி திரையுலகைச் சேர்ந்த பலரும் டாடா படத்தை பாராட்டி தள்ளினர். தியேட்டர்களில் தொடந்து ரசிகர்களில் வரவேற்பை பெற்று வரும் கவின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது முதல் காதல் பற்றி தெரிவித்துள்ளார்.
நான் 4,5 ஆம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலில் ஒரு பெண்ணை காதலித்தேன். எங்க ஸ்கூலில் ஆணும், பெண்ணும் 5 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் அருகருகே தான் அமர வேண்டும் என்ற விதி இருந்தது. அப்போது என் பக்கத்துல ஒரு பொண்ணு இருந்தாங்க. எனக்கு சாப்பாடு தருவாங்க, நான் முடிக்காத ஹோம் ஒர்க் எல்லாம் முடிச்சி கொடுப்பாங்க. அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன். அவங்க நம்மளை லவ் பண்றாங்கன்னு நினைச்சி டிராயிங் நோட்டுல ஐ லவ் யூன்னு எழுதி வச்சிட்டேன்.
மறுநாள் எல்லோரும் வகுப்புக்கு வர்றோம். எல்லோரையும் உள்ளே வர சொன்ன எங்க டீச்சர் என்னை வெளியே நிக்க சொல்லிட்டாங்க. அந்த பொண்ணு டீசண்டா என்கிட்ட பிடிக்கலைன்னு சொல்லிருக்கலாம். என்னோட நோட்டுல திட்டி எழுதியிருக்கலாம். ஆனால் டீச்சர் கிட்ட சொல்லிட்டாங்க. எனக்கு அடி விழுந்துச்சு என கவின் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.