மகான் படத்தை பங்கமாக கலாய்த்த கஸ்தூரி.. ட்விட்டரில் குவிந்த விக்ரம் பேன்ஸ்!
கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், அப்பா, மகன் இணைந்து நடித்த படங்கள் எதுவும் ஓடாது என்பதற்கு மகான் படமும் ஒரு உதாரணமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நிஜ அப்பா மற்றும் மகன்கள் இணைந்து நடித்த படம் எதுவும் ஹிட் ஆனதில்லை என மகான் படம் குறித்து நடிகை கஸ்தூரியின் டிவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம், சிம்ரன் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. காந்தியக்கொள்ளைகளை தீவிரமாக கடைப்பிடிக்கும் குடும்பத்தினர் பற்றிய கதையாக அமைந்துள்ளது மகான். இக்குடும்பத்தில் பிறந்த விக்ரமிற்கு காந்தி மகான் என பெயர் வைத்து சிறுவயதில் இருந்தே மது ஒழிப்பு, அகிம்சை உள்ளிட்ட காந்தியக்கொள்கைகளோடு வளர்க்கப்படுகிறார். இதோடு அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சிம்ரனும் காந்தியக்கொள்கைகளைக் கடைப்பிபடிப்பவராகவும் இருந்தமையால் இருவரும் திருமணயம் செய்துக்கொள்கிறார்கள். இப்பிடி இருவரும் சேர்ந்து காந்தியக்கொள்கைகளை மட்டும் கடைப்பிடித்து வந்த நிலையில், மற்றவர்களைப் பார்த்து விக்ரம் தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
எனவே காந்தியக்கொள்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி மது, சீட்டு, ஆட்டம் பாட்டம் என ஒரே நாளில் அனைத்தையும் ஒரே நாளில் அனுபவித்து வந்த இவர், ஒரே நாள் விக்ரமினின் வாழ்க்கையை அடியோடு மாற்றி தலைகீழாக மாற்றியது. விக்ரம் தன்னுடைய மனைவி மற்றும் மகனை பிரிந்து தனது நண்பருடன் இணைந்து மதுப் பானம் தயாரித்து மிகப்பெரிய தொழிலதிபராக மாறுகிறார்.
இப்படி காந்தியக்கொள்கையைப் பின்பற்றி, அக்கொள்கையை மறந்து எப்படி மாறுகிறார் என்பது தான் கதைக்களம். படம் முழுவதும் விக்ரமின் நடிப்பு அனைவரையும் மிளர வைத்திருக்கும். அதே போல துருவ் விக்ரமும், ஆதித்யா வர்மா படத்தில் வந்ததைப்போல் படம் முழுக்க விறைப்பாகவே வருகிறார். இதனால் சில காட்சிகளால் தோன்றினாலும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளனர். இப்படத்திற்குப் பாராட்டுக்கள் ஒரு புறம் அதிகரித்துவந்தாலும், எதிர்மறையாக கருத்துக்களும் அதிகரித்துவருகிறது. அந்த வரிசையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் மகான் படம் குறித்து விமர்சித்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Meh-aan. Fails to break the father son jinx in Tamil cinema.
— Kasturi Shankar (@KasthuriShankar) February 19, 2022
Can you name any hit Tamil movie starring real life father and son duo ?
கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், அப்பா, மகன் இணைந்து நடித்த படங்கள் எதுவும் ஓடாது என்பதற்கு மகான் படமும் ஒரு உதாரணமாகிவிட்டது என்றும், சினிமாத்துறையில் நிஜ அப்பா, மகன் இணைந்து நடித்து ஹிட்டான திரைப்படங்கள் எதுவும் இல்லை.. இருந்தால் சொல்லுங்கள்? என மகான் படம் குறித்து மோசமாக கருத்தைப்பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த விக்ரமின் ரசிகர்கள், உங்களுக்கு படம் பிடிக்க வில்லை என்றால் அத்தனை படமும் மோசமாகிவிடுமோ? என கேட்டு கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.