‘பருத்திவீரன் பிரியாமணியை பார்த்தது போல் உள்ளது’ - ஷங்கர் மகளை பாராட்டிய கார்த்தி
சினிமாத்துறை சார்ந்த இடங்களில் நடைபெறும் ஐடி ரெய்டு இயல்பான ஒன்றுதான், மூன்றாண்டுக்கு ஒரு முறை நடப்பது தான் அதில் பின்புலம் இருப்பதாக தெரியவில்லை நடிகர் கார்த்தி பேட்டி.
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டைமெண்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். முத்தையா இயக்கி, நடிகர் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் இமயம், பாரதி ராஜா, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, விருமன் படத்தின் நடிகர் கார்த்தி நடிகை அதிதி, நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விருமன் படத்தில் நடிகை அதிதி நடிப்பு பருத்திவீரன் படத்தில் பிரியாமணியை பார்த்தது போல் இருக்கிறது.
— Arunchinna (@iamarunchinna) August 4, 2022
- நடிகர் கார்த்திக் விருமன் பட இசைவெளியீட்டு விழாவில் பேட்டி#VirumanAudioLaunch | @Karthi_Offl | @thisisysr | #madurai | #viruman pic.twitter.com/Y4l2cgNfmw
மதுரையில் திரைப்பட நடிகர் கார்த்தி நடித்து வெளிவரவுள்ள விருமன் பட திரைப்பட ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது..,” மதுரை என்றாலே ஸ்பெசல் தான். விருமன் 12-ம் ரிலிஸ் ஆகவுள்ளது. கடைக்குட்டி சிங்கத்திற்கு பின் கிராமம் சார்ந்த படம் , கிராமத்தில் உள்ள வீரம் பாசம் கேளிக்கை என்பதே வேறுவகையில் இருக்கும்.
இது போன்ற கிராமம் சார்ந்த இங்கு வரும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே இயக்குநரிடம் இரு முறை நடித்துள்ளேன். நடிகை அதிதி சிறப்பாக நடித்துள்ளார். என்னைப் போல் அவரும் படித்து முடித்துவிட்டு சினிவிற்கு வந்துள்ளார். பருத்திவீரன் படத்தில் நடிகை பிரியாமணியை பார்த்தது போல் விருமன் படத்தில் அதிதியை பார்க்கிறேன். இந்த இசைவெளியீட்டு நிகழ்ச்சி திருவிழா போல உள்ளது.
மதுரை சார்ந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மதுரையில் வைத்து தான் சிறப்பு. சினிமாத்துறை சார்ந்த இடங்களில் நடைபெறும் ஐடி ரெய்டு இயல்பான ஒன்றுதான். மூன்றாண்டுக்கு ஒரு முறை நடப்பது தான் அதில் பின்புலம் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் சினிமாத்துறையினர் மீதான ரெய்டுகள் மட்டும் பெரிதாக செய்தி ஆகிவிடுகிறது” என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்