Watch video : துபாய் புர்ஜ் கலிஃபாவில் புயலென பாய்ந்த விக்ரம் ட்ரைலர்.. இதுல கமலை பாருங்களேன்..
துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் படத்தின் ட்ரைலரை நேற்று ஒளிபரப்பப்பட்டது.
துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் படத்தின் ட்ரைலரை நேற்று ஒளிபரப்பப்பட்டபோது அதை நடிகர் கமல்ஹாசன் நின்று வேடிக்கைப்பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விக்ரம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ம் தேதி திரையரங்குகளில் களமிறங்குகிறது. விக்ரம் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இடையில் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.
படத்தின் வெளியீட்டு தேதிக்கான இந்த நேரத்தில், படத்தின் அப்டேட் குறித்து அடுத்தடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் கமல் எழுதி, பாடிய "பத்தல பத்தல" பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
‘ஜல்லிக்கட்டு’ படத்துக்காக தேசிய விருது பெற்ற கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார் மற்றும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூன் 3ஆம் தேதி விக்ரம் படம் வெளியாகவுள்ளது.இதைத் தொடர்ந்து விக்ரமை சிபிஎப்சி உறுப்பினர்கள் தணிக்கை செய்துள்ளனர். இதனை திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கமல்ஹாசன் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார். விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என கூறப்படுகிறது.
View this post on Instagram
இந்தநிலையில், விக்ரம் படத்தை விளம்பரம் செய்ய படக்குழு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் வெளியான அந்த படத்தின் ட்ரைலரை விக்ரம் படக்குழு நேற்று மாலை துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இரவு 8.10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. அப்போது அந்த படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன் நின்று வேடிக்கை பார்த்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக கமல்ஹாசன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு சினிமா ரசிகர்கள் இவரை பார்த்து துள்ளிகுதித்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்