Kamal Rashid Khan: மரணம் குறித்து சர்ச்சை பதிவுகள்.. அடுத்தடுத்து நடந்த விபரீதங்கள்.. பாலிவுட் நடிகரை கைது செய்த போலீஸ்!
கேஆர்கே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு பிரபலமானவர்.
சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட பிரபல பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கானை மும்பை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கேஆர்கே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு பிரபலமானவர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டார். அது மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் பற்றியது. அதில் ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இறந்து விடக் கூடாது. காரணம் இப்போது தான் மதுபானக் கடைகள் திறக்கப்படவிருக்கின்றன என பதிவிட்டு இருந்தார்.
This Pathetic KRK is arrested. Look at his disgusting tweets that he tweeted back in 2020.#KRKArrested pic.twitter.com/2I4IR3Ooqt
— Karan Raghav 🇮🇳 (@krnraghav) August 30, 2022
ட்விட்டர் பதிவால் வெடித்த சர்ச்சை
இது சர்ச்சையான நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் ரிஷி கபூர் மரணமடைந்திருந்தார். இதேபோல் அரிய வகை புற்றுநோயால் உயிரிழந்த நடிகர் இர்ஃபான் கான் குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். பாலிவுட்டின் முக்கிய பிரபலங்களான இவர்கள் இருவரின் மரணம் குறித்து தரக்குறைவாக தெரிவித்ததாக கமல் ரஷீத் கான் மீது யுவ சேனா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ராகுல் கனல் என்பவர் புகார் அளித்தார்.
View this post on Instagram
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மும்பை மலாட் காவல்துறையினர் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதனிடையே துபாயில் இருந்து இன்று மும்பை வந்த நடிகர் கமல் ரஷீத் கானை மும்பை விமான நிலையத்தில் வைத்து மலாட் போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஐபிசி பிரிவு 294 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இன்று போரிவலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.