மேலும் அறிய

Vijay Sethupathi: விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க ஆசைப்படும் ஜெயம் ரவி.. என்ன காரணம் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தான் தனது முதல் படத்தை இயக்க இருப்பதாக இறைவன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்

இறைவன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அப்படத்தின் ஹீரோ ஜெயம் ரவி, “தனது முதல் படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்க இருப்பதாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 

இறைவன்

ஜெயம் ரவி - நயன்தாரா நடித்திருக்கும் இறைவன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ.அகமத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தனி ஒருவன் திரைப்படத்துக்கு பிறகு ஜெயம் ரவி - நயன்தாரா இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள். ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், சார்லி, அழகம் பெருமாள், பகவதி பெருமாள், விஜயலட்சுமி, மற்றும் வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் இறைவன் படத்தில் நடித்துள்ளார்கள். சைக்காலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ALSO READ: 1000 Crore Club Movies: கல்லா கட்டும் இந்திய சினிமா... இதுவரை ரூ.1,000 கோடி வசூலித்த படங்கள் என்னென்ன தெரியுமா?

விஜய் சேதுபதி  குறித்து ஜெயம் ரவி

படத்தின் ரிலீஸை ஒட்டி நேற்று சென்னையில் இறைவின் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, இயக்குநர் அகமத், மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் ஜெயம் ரவி  குறித்து சில விஷயங்களை தெரிவித்தார். அப்போது, “ இயக்குநர் மோகன் ராஜா ஆபீஸிலும் , எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நான் ஜெயம் ரவியைப் பார்த்திருக்கிறேன். நான் பார்த்த முதல் நடிகர் ஜெயம் ரவிதான்” என்று சொன்னார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஜெயம் ரவி விஜய் சேதுபதியிடம் “ உண்மையில் நான் படம் இயக்கவேண்டும் என்று நினைத்த முதல் நடிகர்  நீங்கள் (விஜய் சேதுபதி) தான். நான் உங்களை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுகிறேன்.  ஒரு நடிகனுக்குத் தேவையான அனைத்தும் உங்களிடம் இருக்கிறது. ஏனென்றால் எல்லாவற்றையுமே அவரே நடித்து எல்லா வேலைகளையும் அவரே செய்துவிடுவார்.  நான் நன்றாக இயக்கியிருக்கிறேன் என்று எனக்கு ஈஸியாக பெயர் கிடைத்துவிடும். நாம் இருவரும் சேர்ந்து நடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் நான் உங்களை வைத்து ஒரு படமாவது எடுக்க ஆசைப்படுகிறேன். எனக்காக சிறிது நாட்களுக்கு நீங்கள் உங்களுடைய கால்ஷீட்டை ஒதுக்கினால் நன்றாக இருக்கும்” என்று ஜெயம் ரவி பேசினார்.

மகாராஜா

இதற்கிடையில் குரங்கு பொம்மை படத்தை இயக்கி பெரிதும் பாராட்டப்பட்ட நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கும் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இது விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படமாக வெளியாக இருக்கிறது. இதில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். படத்தில் மம்தா மோகன் தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி, நட்டி என பலரும் நடித்துள்ளனர். 

Chandramukhi 2: காணாமல் போன 480 ஷாட்கள்.. ஷாக்கான சந்திரமுகி 2 படக்குழு.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
Breaking News LIVE:  நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
Breaking News LIVE:  நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
AIADMK Protest: கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!
கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
Crime: ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்!
ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்!
Indian 2: இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவானதன் பின்னணி.. இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவானதன் பின்னணி.. இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
Embed widget