Vadivelu: வடிவேலுவுக்கு ஈகோ ஜாஸ்தி: இப்படித்தான் சக நடிகர்களை மோசமா நடத்துவார்! பொங்கிய நடிகர் ஜெயமணி!
நடிகர் வடிவேலு ரொம்பவே ஈகோ பிடித்தவர் என்றும், மற்ற கலைஞர்களை எப்படி நடத்துவார் என்றும் நடிகர் ஜெயமணி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் கால்பதித்து வருபவர் காமெடி நடிகர் வடிவேலு. ராஜ்கிரண் மூலமாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் வடிவேலு. ஆரம்ப காலகட்டங்களில் கவுண்டமணி, செந்தில், விவேக் உடன் இணைந்து பல படங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டி, ரசிகர் பட்டாளங்களை உருவாக்கிக் கொண்டார். இவரது கேரக்டரின் பெயரைச் சொன்னாலே சிரிக்க தோன்றும் அளவிற்கு காமெடியில் கலக்கியவர்.
ஒருகட்டத்தில் கவுண்டமணி, செந்தில், விவேக் ஆகியோரது மார்க்கெட்டை விட வடிவேலுவின் மார்க்கெட் உயர்ந்தது. இதையடுத்து ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். மேலும், வடிவேலு இருந்தால் அந்த படம் ஹிட்டு என்று சொல்லும் அளவிற்கு எல்லா படங்களிலும் கமிட்டாகி பிஸியான நடிகராக வலம் வந்தார். அப்படி தான் சந்திரமுகி படத்திலும் நடித்தார். இந்தப் படத்தில் முதலில் வடிவேலுவின் கால்ஷீட் தான் வாங்கப்பட்டது. இதையடுத்து தான் மற்ற நடிகர், நடிகைகளின் கால்ஷீட் பெறப்பட்டது.

அப்படி எல்லா படங்களிலும் நடித்து வந்த வடிவேலு, விஜயகாந்தை எதிர்த்து பேசி சிக்கலில் சிக்கிக் கொண்டார். இதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட்டை இழந்து சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் ஓரங்கட்டப்பட்டார். கடைசியாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலமாக மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் பெரியளவில் பேசப்படாத நிலையில், சந்திரமுகி பார்ட் 2 படமும் பெருசா ஓடவில்லை.
அப்போது தான் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். இந்தப் படம் கொடுத்த அமோக வரவேற்புக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் வடிவேலு பற்றி நடிகர் ஜெயமணி அதிர்ச்சியான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

ஜெயமணி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வடிவேலு யாரையும் சரிக்கு சமமாக உட்கார வைக்க மாட்டார். அவருக்கு ரொம்பவே ஈகோ சாஸ்தி. படப்பிடிப்பு தளங்களில் கூட தன்னுடன் நடிக்கும் சக காமெடி நடிகர்கள், சேர் இருந்தாலும் கீழே தான் உட்கார வைப்பார். மிகவும் மோசமான குணம் கொண்டவர் என தெரிவித்துள்ளார்.





















