மேலும் அறிய

HBD Goundamani: ‘பத்தவச்சிட்டியே பரட்ட’ - காமெடி லெஜெண்ட் கவுண்ட்டர் மணிக்கு இன்று பிறந்தநாள்!

HBD Goundamani: நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டமணி இன்று 85வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகராக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் காமெடி கிங் என கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் கவுண்டமணி. 70ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவராலும் ரசிக்கப்பட்ட கவுண்டமணி தவிர்க்க முடியாத ஒரு கலைஞன்.  காலத்தால் அழிக்கமுடியாத கடந்துவிட முடியாத திறமையாளர் கவுண்டமணியின் 85வது பிறந்த தினம் இன்று. 

கூட்டத்தில் ஒருவராக தலைகாட்டிய கவுண்டமணியின் முதல் படமாக கருதப்பட்டது 1970ம் ஆண்டு வெளியான 'ராமன் எத்தனை ராமனடி' திரைப்படம். இருப்பினும் பாரதிராஜாவின் அறிமுக படமான '16 வயதினிலே'  படத்தில் பரட்டையாக நடித்த ரஜினியின் கூட்டாளியாக அவரை ஏற்றிவிடும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனம் பெற்றார். அப்படத்தில் அவர் பேசும் 'பத்த வெச்சிட்டியே பரட்ட' வசனம் இன்று வரை பிரபலமாக இருக்கிறது.  

 

HBD Goundamani: ‘பத்தவச்சிட்டியே பரட்ட’ - காமெடி லெஜெண்ட் கவுண்ட்டர் மணிக்கு இன்று பிறந்தநாள்!

நகைச்சுவை கதாபாத்திரங்கள் கவுண்டமணிக்கு கைவந்த ஒன்று என்றாலும் பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்தார். வைதேகி காத்திருந்தாள், கரகாட்டகாரன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கவுண்டமணி - செந்தில் காம்போ தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட சூப்பர்ஹிட் ஜோடிகளானார்கள். அவர்களின் கூட்டணி காமெடி பட்டி தொட்டி எங்கும் கலக்கியது. கவுண்டமணியின் நக்கலும் நையாண்டியும், அப்பாவி தனமாக முகத்தை வைத்து கொண்டு குசும்பு செய்யும் செந்திலும் ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைத்தது. இவர்களை போன்ற ஒரு வெற்றி காம்போ இனி அமையுமா என்பது சந்தேகம் தான். 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி உச்சத்தில் இருந்ததற்கு பெரும் பங்களிப்பு இந்த இரட்டையர்களின் காமெடி தான் என்றால் அது மிகையல்ல. 

செந்திலுடன் மட்டுமின்றி நட்சத்திர நடிகர்களுடன் அவருக்கு இருக்கும் அந்த கனெக்ட் வேறு எந்த ஒரு நகைச்சுவை நடிகருக்கும் அந்த அளவுக்கு இருக்காது எனலாம். ஹீரோக்களையும் விட்டு வைக்காமல் அவர்களையும் கவுண்டர் கொடுத்து கலாய்ப்பது கவுண்டமணியின் ஸ்பெஷாலிட்டி. அந்த வகையில் சத்யராஜ், ரஜினி, கமல், கார்த்திக், பிரபு என அனைவருடனும் அவருக்கு இருந்த அந்த பிணைப்பு அபாரமானது. ரஜினியுடன் மன்னன், உழைப்பாளி என்றால் கமலுடன் இந்தியன், சிங்காரவேலன், கார்த்திக்குடன் உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, லக்கிமேன், மேட்டுக்குடி, பிரபுவுடன் மை டியர் மார்த்தாண்டன், தேடினேன் வந்தது, கன்னிராசி, வியட்நாம் காலனி போன்ற படங்களில் பின்னி இருப்பார்.

 

HBD Goundamani: ‘பத்தவச்சிட்டியே பரட்ட’ - காமெடி லெஜெண்ட் கவுண்ட்டர் மணிக்கு இன்று பிறந்தநாள்!

இதையும் தாண்டி சத்யராஜ் - கவுண்டமணி ஜோடி மிகவும் பொருத்தமான ஜோடி. அவர்கள் இருவரும் இணைந்து கலக்கிய நடிகன், பிரம்மா, மாமன் மகள் படங்களில் மாறி மாறி கலாய்த்து கொள்வது இன்றளவும் பார்க்கையில் வாய்விட்டு சிரிக்க வைக்கும். ஸ்டார் நடிகர்களையே கலாய்க்கும் அளவுக்கு சுதந்திரம் பெற்றிந்தார். ரசிகர்களும் அதை ரசித்தனர். இந்த பாக்கியம் பெற்ற ஒரே நடிகர் கவுண்டமணி மட்டுமே. அவரின் கவுண்ட்டர் கொடுக்கும் திறமை ஒரு தனி கலை என்றே சொல்லலாம். அதுவே அவரை இன்று வரை நகைச்சுவை சக்கரவர்த்தி என்ற அடைமொழியுடன் கொண்டாட வைக்கிறது. 

நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த கவுண்டமணி தற்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சிங்கம் புலி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. விரைவில் அதன் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் கவுண்டமணியை திரையில் பார்க்க ஆவலுடன் அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget