Ganja Karuppu: ஆஃப்பாயில் போட்டு பாலாவை நெருங்கிய கஞ்சா கருப்பு... சுவாரஸ்ய தகவல்!
அறிமுகமானது பிதாமகன் படம் என்றாலும் கஞ்சா கருப்புவுக்கு திருப்புமுனையாக அமைந்தது அமீர் இயக்கிய ராம் தான். அதில் வாழவந்தான் என்ற கேரக்டரில் அவர் பேசிய வசனங்கள் இன்றளவும் மறக்க முடியாது.
பிதாமகன் படத்தின் தனக்கு இயக்குநர் பாலா வாய்ப்பு கொடுத்தது எப்படி என நடிகர் கஞ்சா கருப்பு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் பிதாமகன் படம் வெளியாகி இருந்தது. விக்ரம் நடித்த சேது படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற மீண்டும் அவருடன் இப்படத்தில் இணைந்திருந்தார். மேலும் பிதாமகன் படத்தில் நடிகர் சூர்யா, நடிகைகள் சங்கீதா, லைலா, கருணாஸ், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விக்ரம் வென்றார். பிதாமகன் படத்தின் ஒரு காட்சியில் நடிகர் கஞ்சா கருப்பு தோன்றியிருப்பார்.
அறிமுகமானது இந்த படம் என்றாலும் கஞ்சா கருப்புவுக்கு திருப்புமுனையாக அமைந்தது அமீர் இயக்கிய ராம் தான். அதில் வாழவந்தான் என்ற கேரக்டரில் அவர் பேசிய வசனங்கள் இன்றளவும் மறக்க முடியாது. தொடர்ந்து சிவகாசி, சண்டகோழி, பருத்தி வீரன், தாமிரபரணி, சுப்பிரமணியபுரம், நாடோடிகள், அவள் பெய தமிழரசி, களவாணி என பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கஞ்சா கருப்பு கலந்து கொண்டார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர்கள் பாலா மற்றும் அமீர் குறித்து பேசியுள்ளார்.
Read this in Ganja Karuppu voice. 😂😂😂 https://t.co/8zP6ls3Z15 pic.twitter.com/HqQ3oJRzSo
— Vinod Ramnath (@NaanumEngineer) September 1, 2019
இன்னைக்கு எத்தனையோ பிரபலங்கள் சினிமாவை தொடர்ந்து ஹோட்டல் பிசினஸ் பண்ணிகிட்டு இருக்காங்க. ஆனால் நான் சின்ன வயசில இருந்தே ஹோட்டல் வச்சிருந்தேன். சிவகங்கை மாவட்டத்துல பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல சாதாரணமா கூரைக்கடை தான் என்னோட ஹோட்டல். அங்க இயக்குநர் பாலா அவரது நண்பரோட என்னோட கடைக்கு சாப்பிட வந்தாரு. அவர் என்ன இருக்குன்னு கேட்க, நான் என்ன வேணும்ன்னு கேட்டேன். இட்லி, கொத்தமல்லி சட்னி வேணும்ன்னு கேட்க, நான் செஞ்சி கொடுத்தேன். அப்புறம் ஆஃப்பாயில் கேட்டு, நான் போட்டுக் கொடுத்ததை பார்த்து பாராட்டினார். பின்னர் எவ்வளவு ஆச்சு என கேட்க நான் சாப்பாட்டுக்குலாம் காசு வேண்டாம் என சொன்னேன்.
ஆனால் பைக்குள்ள கையை விட்டு கிள்ளி கொடுக்கமாட்டாங்க, அள்ளிக் கொடுப்பார் என்பது போல ரூ.20 ஆயிரம் கொடுத்தாரு. அது எனக்கு ரூ.20 லட்சமா தெரிஞ்சிது. உடனே கடையை டெவலப் பண்ணுனேன். திடீர்ன்னு ஒருநாள் திரும்ப பாலா வந்தார். எனக்கு ஒரு பிரச்சனைடா. உடனே கிளம்பு என சொல்ல நான் உடன் சென்றேன். அங்க போன அப்புறம் தான் ஷூட்டிங்கில் நடிக்கப் போறோம்ன்னு தெரிஞ்சது. அந்த நேரம் ஒரு வாக்குறுதி வாங்குனாரு. நான் உனக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பேன். நீ வந்து எனக்கு சொந்தம்ன்னு சொல்லக்கூடாது. என் பேரை சொல்லக்கூடாது. வேலைக்காரனோடு வேலைக்காரனா தான் இருக்கணும்.
பின்னாடி நீ பெரிய ஆள் ஆன அப்புறம் என் பெயரை சொல்லிக்கலாம் என பாலா சொன்னார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அமீர். அவர் ராம் படம் பண்றப்ப அந்த கேரக்டர் ரொம்ப கனமானது என்பதால் பல பேரை ஆடிஷன் பண்ணி பார்த்து செட்டாகல. அப்ப எங்க அண்ணன் மறைந்த ஆர்ட் டைரக்டர் செல்வா எனக்கு போன் பண்ணி ராம் பட வாய்ப்பு குறித்து சொன்னார். எனக்கு பிள்ளையார் சுழி போட்டது இயக்குநர் பாலா என்றால் ரோடு போட்டு கொடுத்தது அமீர் தான் என அந்த நேர்காணலில் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.