Director Visu | ‛டிசிப்ளின் இல்லைன்னா... யாரா இருந்தாலும் தூக்கிடுவேன்...’ மறைந்த விசுவின் ஷூட்டிங் ஸ்பாட் இதுதான்
சினிமாவில் டிசிப்ளின் ரொம்ப முக்கியம் என்று அன்று விசு பேசியது இன்று வைரலாகி வருகிறது.
சினிமாவில் டிசிப்ளின் ரொம்ப முக்கியம் என்று அன்று விசு பேசியது இன்று வைரலாகி வருகிறது. குடும்பப்படங்களின் டிரேட்மார் என்று அறியப்படும் விசு தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க இயக்குநர்களில் முக்கியமானவர் .
நாடகத்துறையில் இருந்து வந்த முக்கியமான இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், பிறகு குடும்பத் திரைப்படங்களை எடுக்க ஆரம்பித்தார். நம்பி குடும்பத்துடன் செல்லலாம் என்ற கேரன்ட்டியால் ஏ,பி,சி என அனைத்து சென்டர்களில் விசு படம் வசூலை அள்ளிக் குவித்தது.
விசு இயக்கத்தில் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
‘மணல் கயிறு’, ‘பட்டுக்கோட்டை பெரியப்பா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். மேலும் ரஜினிகாந்துடன் இவர் இணைந்து நடித்த ‘அருணாச்சலம்’,‘மன்னன்’,‘உழைப்பாளி’ ஆகிய பெரிய வரவேற்பைப் பெற்றன.
ரஜினியின் நடிப்பில் ஓஹோவென ஓடிய ‘தில்லுமுல்லு’ படத்திற்கு விசுதான் வசனம் எழுதினார். அந்தப் படம் வசனத்திற்காகவே பெரிதும் பேசப்பட்டது. தொலைக்காட்சியில் இவர் ‘அரட்டை அரங்கம்’ என்ற நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பட்டித்தொட்டி முழுக்க பட்டிமன்றங்களை நடத்தினார். பல வருடங்கள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
அப்படிப்பட்ட விசு கடந்த 2020 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் கூட அவரின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. இன்றைக்கு கண்ணம்மா.. கம்முனு கெடு டயலாக் நினைவுக்கு வந்து செல்லும்.
விசுவின் பேட்டி ஒன்று இப்போது வைரலாகி விடுவேன். சினிமாவில் நேர மேலாண்மை எவ்வளவு முக்கியமென்பதை அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
அவரது பேச்சு, "எனக்கு டைம் ரொம்ப முக்கியம். ஒரு ஷூட்டிங் 9 மணிக்கு ஆரம்பித்தால் செட் 8.30 மணி ரெடியா இருக்கணும், அப்ப ஆர்ட் டைரக்டர் 7.30 மணிக்கு வந்து வேலை ஆரம்பிச்சிருக்க வேண்டும், அவர் வேலையை ஆரம்பிக்க ஏதுவாது 6.30 மணி சாப்பாடு தயாராகி இருக்க வேண்டும், அந்த சமையல் ஆள் 5.00 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து வந்திருக்க வேண்டும். அப்படியென்றால் ஒரு டிரைவர் அந்த நபரை 4 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து ஸ்பாட்டுக்கு கூட்டு வர வேண்டும்.
இப்படி சினிமா எடுப்பதில் அனைவரும் ஒரு கோட்டுக்குள் வர வேண்டும் என நினைப்பேன். அதில் வராதவர்கள் யாராக இருந்தாலும் ஹீரோவாக இருந்தாலும், ஹீரோயினாக இருந்தாலும் வரவே வேண்டாம் எனக் கூறுவேன். அப்புறம் நான் பட்டிமன்றம், அரட்டை அரங்கம் நடத்தினேன். தமிழகத்தில் கும்மிடிபூண்டி தொடங்கி கன்னியாகுமாரி வரையில் பெரும் பேச்சாளர்களை உருவாக்கியதில் விசுவின் அரட்டை அரங்கத்திற்கு பெரும் பங்குண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்