’வேலையப் பாரு.. கட்சில வந்து சிக்காதன்னு சொன்னாரு..’ விஜய்காந்த் குறித்து பேசிய ரமேஷ் கண்ணா!
விஜயகாந்த் சார் ப்யூர் ஹார்ட், ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு நபர் என்று நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் சார் ப்யூர் ஹார்ட், ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு நபர் என்று நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இருந்து வருபவர்களில் எப்போதும் மக்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருப்பவர் ரமேஷ் கண்ணா. நகைச்சுவை நடிகர், இயக்குநர், கதாசிரியர் என அறியப்படுபவர்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும் , இயக்குநருமான ராமேஷ் கண்ணா பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படம் , ஃபிரண்ட்ஸ் படத்தில் விஜய் மற்றும் சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த காமெடி சீன்கள் எல்லாம் இன்றளவும் சூப்பர் டூப்பர் ஹிட்.
விஜயகாந்த் சார் என் மேல் ரொம்ப பாசமாக இருப்பார். விஜயகாந்த் சார் செட்டில் நடிகர்களுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவார். அவர் கட்சி ஆரம்பித்தபோது நான் கஜேந்திரா படம் பண்ணிக் கொண்டிருந்தேன். அவரிடம் போய் நான் அண்ணே நான் உங்க கட்சியில் சேர்ந்துக்குறேன்னு சொன்னேன். உடனே அவர் சொன்னது வேலையப் பாரு. ஏதாவது பிரச்சனைன்னா சொல்லும் நான் ஹெல்ப் பண்றேன். அதவிட்டுட்டு கட்சில வந்து சிக்கிக்காதன்னு சொன்னார். யாராவது கட்சி ஆரம்பிக்குற போது இப்படி சொல்வாங்களா? யார் வேணாலும் சேரட்டும் பலம் காட்டுவோம்னுதான நினைப்பாங்க. ஆனா அவரு என் கிட்ட அப்படிச் சொன்னார். அவர் ஒரு ப்யூர் ஹார்ட், ஸ்ட்ரெய் ஃபார்வர்டு நபர். மனசுல என்ன இருக்கோ அதை நேரடியாக சொல்வார். அவர் என்னிக்குமே யார் முதுகுலையும் ஏறி சவாரி செய்யணும்னு நினைக்க மாட்டார்.
பேட்டி என்றாலும் கூட தைரியமா பதில் சொல்வார். இப்போ நீங்களே அவர பேட்டியெடுக்கிறீங்கன்னு வச்சுக்குவோம். சார் அந்த நடிகை இப்படி உங்ககிட்ட சண்டை போட்டுட்டாங்களாமே என்று கேட்டீர்கள்னா. என்ன தம்பி என்ன கோர்த்துவிட பார்க்குறயான்னு ஸ்ட்ரெய்ட்டா கேட்பார். மழுப்பலே அவர் பதிலில் இருக்காது. அவர் எப்பவும் நல்லா இருக்கணும். அது தான் என்னோட ஆசை. அதுதான் என்னோட பிரார்த்தனை.
வானத்தைப் போல படத்தில் நான் விஜயகாந்த் சாரோட நடித்த சீன்ஸ் எல்லாம் நான் அவ்வளவு ரசித்துப் பண்ணேன். இவ்வாறு அந்தப் பேட்டியில் ரமேஷ் கண்ணா பேசியுள்ளார்.
அதேபோல், விக்ரமன் பற்றி பேசும்போது, "விக்ரமன் சார் வித்தியாசமா படம் செய்வார். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் வெற்றி பெறாது என்று அதில் நடித்த கார்த்திக் சொன்னார். நானும் அவரிடம் போய், சார் கார்த்திக் இப்படி சொல்றாரு. நந்தவனத் தேரு மாதிரி இருக்குன்னு சொல்றாரு என்றேன். அதற்கு விக்ரமன் நான் அந்தப் படம் பார்த்ததில்லை. ஆனால் என்னுடைய் ட்ரீட்மென்ட் வேற என்றார். படம் சூப்பர் ஹிட் ஆனது. கார்த்திக்கே கூட அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை" என்றார்.