Rajnikanth Next Movie | ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்?
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து அடுத்த படம் இயக்கப்போகும் இயக்குநர் தனுஷ் என்று சினிமா வட்டாரங்கள் கூறிவருகிறார்கள் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் "அண்ணாத்த". இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இது படம் ரஜினியின் 166-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாத்த கிராமத்துக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். முத்து படத்திற்கு பிறகு ரஜினியுடன் அதிக நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படம் "அண்ணாத்த " என கூறப்படுகிறது.

மேலும் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக இணைந்துள்ளார். 90-களில் ரஜினியுடன் ஜோடிபோட்ட குஷ்புவும் , மீனாவும் ரஜினியின் முறை பெண்களாக வலம் வருகிறார்களாம். வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் படத்தில் ரஜினியின் பாகம் முடிவுக்கு வந்துவிட்டதால், சூப்பர்ஸ்டார் தற்பொழுது சென்னை திரும்பி தனது கொரோனா இரண்டாவது தடுப்பூசி போட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. "அண்ணாத்த" டப்பிங் முடித்தபிறகு இந்த மாத இறுதியில் அவர் சிறுநீரக பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தபடத்தை யாரோ ஒரு இளம் இயக்குநர் ஒருவருக்கு கொடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கப்போவதாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்தின் அடுத்த படம் அவரது 169-வது படம் . 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங் பெரியசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் தங்கள் கதைகளை ரஜினிகாந்திடம் விவரித்ததாக கூறப்படுகிறது, ஆனால் ரஜினிகாந்த் இன்னும் 'தலைவர் 169' படத்திற்கான இயக்குநரை தேர்வு செய்யவில்லை.
இந்நிலையில் இயக்குநர் தேசிங் பெரியசாமி தான் இயக்கப்போவதில்லை என்ற அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனுஷ் இதற்கு முன்பு பவர் பாண்டி படத்தை இயக்கினார் என்பது நாம் அறிந்ததே. அடுத்து ரஜினியை இயக்கப்போவது யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். நாமும் காத்திருப்போம் இந்த காம்போவிற்காக .





















