ஒரு செங்கல்ல கூட புடுங்க முடியாது...நயன்தாராவுக்கு குபேரா ஆடியோ லாஞ்சில் தனுஷ் பதிலா?
Dhanush Speech. : குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகளுக்கு நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார்

குபேரா ஆடியோ லாஞ்ச்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா , நாகர்ஜூனா , ஜிம் சார்ப் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகளுக்கு நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார்
ஒரு செங்கல்லை கூட புடுங்க முடியாது
" என் படம் வெளியாவதற்கு 2 மாதங்கள் முன்பே என்னைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்பத் தொடங்குகிறார்கள். ஆனால் தீப்பந்தம் போல் என் ரசிகர்கள் இருக்கும் வரை நான் முன்னேறிக் கொண்டுதான் இருப்பேன். 23 வருடங்களாக என் ரசிகர்கள் எனக்கு வழித்துணையாக இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்வரை ஒரு செங்கல்லை கூட உங்களால் பிடுங்க முடியாது. தம்பிகளா கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க. இங்கே இருப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமில்லை என்னுடைய கம்பேனியன்ஸ். சும்மா 4 வதந்திகளை கிளப்பிவிட்டு என்னை முடித்துவிடலாம் என நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய முட்டாள்தனம். உங்கள் சந்தோஷத்தை வெளியில் தேடாதீர்கள். சந்தோஷம் என்பது உங்களுக்குள் இருப்பது. சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் நான் இருந்திருக்கிறேன். இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். எந்த நிலையில் இருந்தாலும் நான் சந்தோஷமாக இருப்பேன். குபேரா மாதிரியான படம் இந்த சமூகத்திற்கு ரொம்ப முக்கியமான படம். வடசென்னை பற்றி 2018 ஆம் ஆண்டில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அடுத்த வருடம் வரும் ' என தனுஷ் பேசினார்.
“ Neenga evlo vena negative campaign pannunga , padathuku rls ku munnadi you can't do any thing , I have my fans ” — @dhanushkraja #Kuberaa #KuberaaAudioLaunch pic.twitter.com/5yYLCf9h8r
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) June 1, 2025





















