மேலும் அறிய

Dhanush | இது 'மன்மத ராசா'வின் நன்றி! சிவசங்கர் மாஸ்டருக்கு தனுஷ் செய்த உதவி!

கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவரும் சிவசங்கர் மாஸ்டருக்கு நடிகர் தனுஷ் பெரும் தொகையை கொடுத்து உதவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் சிவசங்கர் மாஸ்டரும் ஒருவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 800க்கும் அதிகமான படங்களுக்கு நடன காட்சிகள் அமைத்தவர்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் பல பெரிய ஹீரோக்களை ஆட்டுவித்தவர் சிவசங்கர் மாஸ்டர். அஜித்திற்கு நடனம் பெரிதாக வராது என விமர்சனங்கள் எழுந்த காலக்கட்டத்தில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வரலாறு படத்திற்கு சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்தார்.

பரதநாட்டிய கலைஞராக நடித்த அஜித் சிவசங்கர் மாஸ்டரின் கோரியோவால் பரதநாட்டியத்தை அருமையாக ஆடியிருப்பார். அதேபோல் திருடா திருடி படத்தில் இடம்பெற்ற புகழடைந்த பாடலான மன்மத ராசா  பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர்தான் நடனம் அமைத்தார். அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த நடன அசைவுகளும் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. 

Dhanush  | இது 'மன்மத ராசா'வின் நன்றி! சிவசங்கர் மாஸ்டருக்கு தனுஷ் செய்த உதவி!

அதுமட்டுமின்றி இவர் தீரா தீரா தீரா பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். நடன அமைப்பு மட்டுமின்றி சிவசங்கர் மாஸ்டர், வரலாறு, ஒன்பது ரூபாய் நோட்டு, பரதேசி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவரது மனைவி மற்றும் மூத்த மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து சிகிச்சைக்கு உதவ கோரி அவரது மகன் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி சோனு சூட் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவரும் சிவசங்கர் மாஸ்டருக்கு நடிகர் தனுஷ் பெரும் தொகையை கொடுத்து உதவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகை அவரது குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: லீவு.. லீவு.. மிரட்டும் மழையால் இந்த மாவட்டத்துக்கெல்லாம் இன்று விடுமுறை..!

Bigg Boss 5 Tamil: கமலுக்கு பதில் இவர் ; பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரெடியான ரம்யா கிருஷ்ணன்

மாநாடு பார்த்துவிட்டு தயாரிப்பாளருக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார்! இது ரஜினியின் ரிவியூ.!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget