Bigg Boss 5 Tamil: கமலுக்கு பதில் இவர் ; பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரெடியான ரம்யா கிருஷ்ணன்
நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்குள் நிலவும் சண்டைச் சச்சரவுகள், மனஸ்தாபங்கள், வாக்குவாதங்களே பிக்பாஸ். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது.
பிக்பாஸின் 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரின் மகளான ஷ்ருதி ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. அல்லது கமலே ஆன்லைன் வழியாக இந்த வார இறுதி எபிசோடை தொகுத்து வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: Maanaadu Celebrites Wishes | வந்தான் வென்றான் ரிப்பீட்டு..மாநாடு படத்தை கொண்டாடித்தீர்க்கும் பிரபலங்கள்..
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசனில் இந்த வார இறுதி எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, 2019-ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் தெலுங்கு சீசனின் சிறப்பு எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனால், அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த் ஃபார்மெட் தெரியும் என்பதால் ரம்யா கிருஷ்ணனே தமிழ் நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடையும் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021
முன்னதாக, அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: Bigg boss tamil | ''கொரோனாதான்.. அதனால என்ன?'' பிக்பாஸுக்காக கமல் எடுத்த வேற முடிவு?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்