அசுரனை மிஞ்சும் நடிப்பு...அவார்டு நிச்சயம்... குபேரா படத்தில் தனுஷிற்கு குவியும் பாராட்டுக்கள்
Kuberaa Movie : தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் தனுஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது

குபேரா விமர்சனம்
சேகர் கம்முலா இயக்கி தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ராஷ்ம்கா மந்தனா , நாகர்ஜூனா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா படத்தின் சிறப்பு காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இந்த படத்தில் அவரது நடிப்பு அமைந்துள்ளது. தனுஷின் நடிப்பை பாராட்டி சமூக வலைதளத்தில் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்
#Kuberaa [4.5/5] : Sekhar Kammula and team delivered a blockbuster. The first half of the film is good but the life and soul of the film is the second half. The emotional scenes in the second half worked out big time.
— Ramesh Bala (@rameshlaus) June 20, 2025
Dhanush delivered a memorable performance. He just lived in…
பாராட்டுக்களை அள்ளும் தனுஷின் நடிப்பு
தனுஷின் ஓப்பனிங் காட்சி ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாம அமைந்துள்ளது. எந்த ஒரு நடிகரும் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க மாட்டார் என ரசிகர்கள் இந்த காட்சியைப் பார்த்து கூறிவருகிறார்கள். நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் 3 மணி நேரம் படத்தில் படத்தில் தனியாக தெரிவது தனுஷின் மட்டும் தனியாக தெரிகிறது.
#Kuberaa - What an intro scene of #Dhanush🫡
— AmuthaBharathi (@CinemaWithAB) June 20, 2025
No other STAR Actors will accept for this💯
The Performer Dhanush has completely surrendered himself👏🛐pic.twitter.com/Vv5Pmdjswi
ஆடுகளம் , அசுரன் , வடசென்னை என பல படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ் இந்த படத்தில் ஒருபடி மேலே சென்றுள்ளார். அசுரன் படத்தையே மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் அவரது நடிப்பு உள்ளதாகவும் இந்த படத்திற்கு நிச்சயம் அவர் பல விருதுகளை தட்டிச் செல்வார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்





















