ரசிகர்களுக்கு தடபுடலாக வாழை இலை விருந்து.. செம ஜாலியாக இருந்த தனுஷ்.. இதுதான் காரணமா!
இட்லி கடை படத்தில் பிஸியாக இருக்கும் நடிகர் தனுஷ் இன்று தனது ரசிகர்களுக்கு தடபுடலான விருந்து வைத்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். தனது திரை வாழ்க்கையின் துவக்கத்தில் பல அவமானங்களையும், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்திருக்கிறார். தனுஷ் என்றால் நடிப்பு அரக்கன் என்ற அளவிற்கு பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில், இன்று தனது 42ஆவது பிறந்தநாளை தனுஷ் கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குபேரா படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நேற்று இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனோடு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனுஷ் இசையமைப்பது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். மிகச்சிறப்பாக பிறந்தநாளை கொண்டாடி வரும் தனுஷ் தனது ரசிகர்களை சந்தித்து சர்ப்ரை்ஸ் செய்துள்ளார். அதுமட்டுமா ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு தழை வாழை விருந்து வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அவரது பிறந்தநாளையொட்டி இன்று ரோகினி திரையரங்கில் வடசென்னை படம் திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் வடசென்னை படத்தை பார்த்து ரசித்தார். வெற்றிமாறனை பார்த்ததும் தனுஷ் ரசிகர்கள் வடசென்னை 2 எப்போது சார் என கேட்டு கூச்சலிட்டனர். மேலும் வெற்றிமாறன் மீது அன்பு பொழிய தாெடங்கினர்.
நடிகர் தனுஷ் தனது ரசிகர்களிடம் கூறுவது, எண்ணம் போல் வாழ்க்கை.. எண்ணம்... போல்... வாழ்க்கை... என்பதை அடிக்கடி வலியுறுத்துவார். அதை உறுதிப்படுத்தும்படி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் மிகவும் ஜாலியாக உரையாடி உள்ளார். ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பது, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுப்பது என செம ஜாலியாக கொண்டாடியுள்ளார். தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தனுஷ், ரசிகர்களுக்கு தனது சார்பில் தடபுடலாக விருந்து வைத்தார்.





















