Charle | ‛கல்லூரி காலத்தில் சரத்குமார் , ராதாரவி செய்த சம்பவங்கள்’ - நடிகர் சார்லி உடைத்த சீக்ரெட்!
இந்த நிலையில் மைத்துனர்களான ராதாரவி மற்றும் சரத்குமார் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை நடிகர் சார்லி மேடையில் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் திரை பின்னணி கொண்ட நடிகர்களுள் முதன்மையனாவர்கள் ராதா ரவி குடும்பம். எம்.ஆர்.ராதாவிற்கு வாரிசுகள் அதிகம் என்றாலும் , ராதா ரவி மற்றும் ராதிகா இருவரும் இன்றைக்கும் அப்பா பெயர் சொல்லும் பிள்ளைகளாக உருவெடுத்து , சினிமாவை தங்களது நடிப்பால் ஆட்சி செய்து வருகின்றனர். ராதிகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி மகள் ஒருவர் உள்ள நிலையில் விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்தார். அதன் பிறகு நடிகர் சரத்குமார் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது , அதனை ராதிகாதான் தயாரித்தார். அப்போது இருவருக்குமான நட்பு காதலாக மாற , கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. முன்னதாக சரத்குமார் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாகவே சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் , இந்த தம்பதிகளின் மகள்தான் வரலட்சுமி சரத்குமார்.
View this post on Instagram
இந்த நிலையில் மைத்துனர்களான ராதாரவி மற்றும் சரத்குமார் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை நடிகர் சார்லி மேடையில் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கல்லூரிகள் , மாணவர்களின் தகுதிகள் மாறியிருந்தாலும் , பஸ் டே..போராட்டம் போன்றவை காலம் காலமாக தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. அப்படிதான் ஒருமுறை பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் கல் வீசி அட்டூழியம் செய்துள்ளனர். இவர்கள் இப்படியாக செய்வதால் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் கெட்ட பெயராக இருக்கிறது என நடிகர் சரத்குமார் சக மாணவராக முயற்சி செய்தாராம் சரத்குமார்.
புதுக்கல்லூரியில் படித்த சரத்குமாரின் பேச்சை யாருமே கேட்கவில்லையாம் . உடனே தனது சட்டையை கட்டிவிட்டு பேருந்தில் ஏறி நின்றாராம் சரத்குமார். உடனே கல் எறிவதை நிறுத்திவிட்டார்களாம் மாணவர்கள். அப்படியான சமுதாய நலனில் அக்கறை கொண்டவர் சரத்குமார் என்கிறார் சார்லி. அதே போல நடிகர் ராதாரவியும் படித்த காலத்தில் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொழுது , பேருந்தை ஓட்டிச்சென்று காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்திலேயே நிறுத்திவிட்டாராம் ராதா ரவி. இதையெல்லாம் செய்ய துணிவு மட்டும் போதாது அற்பணிப்பு உணர்வும் வேண்டும் என பெருமிதம் கொள்கிறார் சார்லி.