மேலும் அறிய

Mayilsamy: 3 முறை பைபாஸ் ஆபரேஷன்.. டாக்டர் பேச்சை கேட்காத மயில்சாமி.. காரணத்தை விளக்கிய போண்டா மணி..!

தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அதிகாலையில் மாரடைப்பால் காலமானார்.

மறைந்த நடிகர் மயில்சாமி எந்த சூழ்நிலையிலும் சோகமாக பார்த்தது இல்லை என நேர்காணல் ஒன்றில் நடிகர் போண்டாமணி கூறியுள்ளார். 

தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் திரையுலகினர், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சித்தார்த், செந்தில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட எண்ணற்ற திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று மயில்சாமி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று அவரது உடல் வடபழனியில் உள்ள ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்ட நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிகர் போண்டாமணி மயில்சாமி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “மயில்சாமி இழப்பு பெரியது. நல்ல காமெடியன். அவர் இறந்தது ஆண்டவனுடைய அமைப்பு அவ்வளவு தான். 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். ஆனாலும் டாக்டர் சொன்னதை கேட்க மாட்டார். நான் இதுபற்றி கேட்டால், இருக்கும் வரை அனுபவித்து மக்களுக்கு நல்லது பண்ணிட்டு போக வேண்டியது தான் என சொல்வார். 

மயில்சாமி இறப்புக்கு அந்த ஏரியாவே அழுகிறது என்றால் அவரின் உதவும் மனப்பான்மையை பார்த்துக் கொள்ளுங்கள் . நான் 4 மாசமாக கிட்னி பாதிப்பால் ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்த போது ஓடோடி வந்தார். டாக்டர்களை சந்தித்து, போண்டா மணி சிலோனில் இருந்து வந்தவன். நாங்க எல்லோரும் இருக்கோம். எப்படியாவது காப்பாத்துங்க என சொல்லி, என் கையில ரூ. 1 லட்சம் திணித்தார். 

இது என்னுடைய காசு இல்ல. என்கிட்ட ரூ.5 ஆயிரம் தான் இருந்துச்சு. உனக்காக நான் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், சத்யராஜ், சரத்குமாரிடம் கேட்டு வாங்கிட்டு வந்தேன்னு சொன்னார். நான் ட்ரீட்மெண்ட் முடிஞ்ச பிறகு நான் பேட்டிக் கொடுத்தது தொடர்பாக கேட்டார். யாரையும் நம்ம குறை சொல்லக்கூடாது என அறிவுரை சொன்னார். 

4 நாளைக்கு முன்பு கூட எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் எல்லாமே சொல்லிட்டேன். ரிப்போர்ட் எடுத்துட்டு வான்னு சொன்னாரு. ஆனால் அதுக்குள்ள இறந்துட்டாரு. எனக்கு ஒரு கையே போன மாதிரி ஆயிடுச்சி. எப்போ போனாலும் செலவுக்கு காசு கொடுப்பாரு. என்னோட கல்யாண விஷயத்திலேயும் உதவி பண்ணாரு. 

மயில்சாமியை இதுவரை நான் சோகமாகவே பார்த்தது இல்லை. டாக்டர் என்னை இறப்பு வீட்டுக்கு போகக்கூடாது என சொல்லி விட்டார். 6 மாதத்திற்குள் ஆபரேஷன் செய்யாவிட்டால் அவ்வளவு தான் என கெடு கொடுத்திருந்தார். மயில்சாமி உடலை பார்க்கப்போன இடத்தில் என் உயிர் போயிருந்தால் கூட சந்தோஷப்பட்ட இருப்பேன்”  எனவும் போண்டா மணி கூறியுள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

ஆங்கில இணையத் தொடரின் ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்
ஆங்கில இணையத் தொடரின் ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்
அர்ஜூன் தாஸ் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அர்ஜூன் தாஸ் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அஸ்வின் நடிக்கும்  
அஸ்வின் நடிக்கும்  "குட் நியூஸ்" (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!
தடகள வீரரின் உண்மை போராட்டத்தை சொல்லும் அங்கீகாரம்..திரைவிமர்சனம் இதோ
தடகள வீரரின் உண்மை போராட்டத்தை சொல்லும் அங்கீகாரம்..திரைவிமர்சனம் இதோ

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
Embed widget