Ashok Selvan Speech: கொரோனாவோடுதான் ஹீரோயின்களுக்கு லிப் கிஸ் அடித்தேன் - போட்டு உடைத்த அசோக் செல்வன்...!
இந்த படத்தில் ஏன் நடித்தீர்கள் என்று பலரும் கேட்டதாகவும், தனக்கு கதை பிடித்திருந்ததால் நடித்ததாகவும் கூறினார் அசோக் செல்வன்.
கொரோனாவோட தான் ஹீரோயின்களுக்கு முத்தம் கொடுத்ததாக ‘மன்மத லீலை’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அசோக் செல்வன் கூறினார்.
‘மாநாடு’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் ‘மன்மத லீலை’. அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடிகளாக சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். கருணாகரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அசோக் செல்வன் பேசுகையில், வெங்கட் பிரபு படங்கள் அனைத்தும் தனக்கு பிடிக்கும் என்றும், இப்போது அவருடன் வேலை செய்தது கனவு நனவு ஆனது போல் இருப்பதாகவும், இந்தப் படத்தை வேகமாக எடுத்து முடித்துவிட்டதாகவும் பேசினார்.
இந்தப் படம் ஷூட்டிங்கின் போது தனக்கு கொரோனா வந்ததாகவும், அந்த நேரத்தில் லிப் கிஸ் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், கொரோனா வந்த நேரத்தில் முத்த காட்சிகளில் நடித்திருந்தாலும் ஹீரோயின்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் கூறினார். இந்த படத்தில் ஏன் நடித்தீர்கள் என்று பலரும் கேட்டதாகவும், தனக்கு கதை பிடித்திருந்ததால் நடித்ததாகவும் கூறிய அசோக் செல்வன், இதில் தவறான விஷயங்கள் எதுவுமில்லை என்றும் தெரிவித்தார்.
இறுதியாக டிரெய்லர் கூறியதுபோல ‘எல்லா ஆண்களும் ராமர்களே மாட்டிக்கொள்ளும் வரை - இப்படிக்கு மாட்டிக்கொண்டவர்’ என்பதை மையமாக இந்தப் படம் இருக்கும் என்றும், முழுக்க முழுக்க நகைச்சுவை படமான இதில், தனக்கு வாய்ப்பளித்த வெங்கட் பிரபுவுக்கு நன்றியும் கூறினார்.
#ManmathaLeelai trailer hits 1 MILLION views 🔥
— Venkat Prabhu Trends (@VP_Trends) March 22, 2022
▶️ https://t.co/FHyb6LhHJu
A @vp_offl Quickie
Isai Playboy @Premgiamaren musical@AshokSelvan @SamyukthaHegde @smruthi_venkat @IRiyaSuman @UmeshJKumar @Aishwarya12dec @saregamasouth @Rockfortent #VP10 #from1stApr pic.twitter.com/K8sk6MHr2Q
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்