Arya Birthday: ஆர்யாவுக்கு இவ்வளவு அழகான குழந்தையா.. பிறந்தநாளில் வெளியான புகைப்படம்.. வாவ் சொல்லும் நெட்டிசன்ஸ்!
பிரபல நடிகர் ஆர்யா தனது பிறந்தநாளில் மகளின் புகைப்படத்தை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்
2005 ஆம் ஆண்டு விஷ்ணு வர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா, மாதவனுக்கு அடுத்தப்படியாக சாக்லெட்பாய் ஆக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.உள்ளம் கேட்குமே, வட்டாரம், பட்டியல், ஓரம் போ, நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், சேட்டை , ராஜா ராணி, இரண்டாம் உலகம்,கஜினிகாந்த், டெடி, எனிமி, சார்பட்டா பரம்பரை என வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
View this post on Instagram
இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டு கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது ஆர்யா மற்றும் சாயிஷா இடையே காதல் மலர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் காப்பான் மற்றும் டெடி படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை கடந்தாண்டு ஜூலை 23 ஆம் தேதி பிறந்தது.
இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் குழந்தையின் புகைப்படம் கூட வெளியிடாமல், ‘ஆரியானா’ என பெயர் சூட்டப்பட்டதாக தெரிவித்தார். இதற்கிடையில் கடந்த வாரம் சாயிஷா தனது பண்ணை வீட்டில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆரியானா அமர்ந்திருக்கும் நிலையில் பின்புறமாக இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் முகத்தை பார்க்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில்ஆர்யா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் நிலையில், ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா சிறப்பு பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆர்யாவுடன் இணைந்திருக்கும் பல புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
Happy Birthday my love! You are the best husband, father and human being ever! We are so blessed to have you in our lives! Thank you for being mine. I love you forever and beyond! ❤️❤️ @arya_offl
— Sayyeshaa (@sayyeshaa) December 11, 2022
Meet our baby girl Ariana! 🧿 pic.twitter.com/JSLmJy7QmY
அந்த பதிவில், என் அன்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீங்கள் எப்போதும் சிறந்த கணவர், தந்தை, மகன் மற்றும் மனிதர்! நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இருப்பதால் நாங்கள் மிகவும் பாக்கியசாலிகளாக உணர்கிறோம்! நீங்கள் என்னுடையதாக இருப்பதற்கு நன்றி! நான் உன்னை என்றென்றும் நேசிக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக தனது மகள் ஆரியானாவையும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.