அப்போ மட்டும் ரசிகர்கள் தேவப்பட்டாங்க..இப்ப வேண்டாமா? ப்ளூ சட்டை மாறனின் சரமாரி கேள்வி
நடிகர்களை கொண்டாடும் ரசிகர்களின் மனநிலையை ஊடகங்கள் ஊக்குவிப்பது குறித்து நடிகர் அஜித் குமார் பேசியது பரவலாக பேசுபொருளாகியுள்ளது

பல வருடங்களுக்குப் பின் நடிகர் அஜித் குமார் தி ஹாலிவுட் ரிப்போர்டருக்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். இதில் தனது சினிமா மற்றும் கார் ரேஸிங் வாழ்க்கை , தனிப்பட்ட வாழ்க்கை , பிரபலமாக இருப்பதன் சவால்கள் , விஜயின் கரூர் விபத்து மற்றும் பல சமூக நிகழ்வுகள் குறித்து அஜித் பேசியுள்ளார். இந்த ஒட்டுமொத்த நேர்காணலிலும் நடிகர்களை ரசிகர்கள் அபரிமிதமாக கொண்டாடுவதற்கு எதிராகவும் பிரபலமாக தான் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை குறித்து அஜித் அதிகம் பேசினார்.
ஊடகங்கள் ரசிகர்களை ஊக்குவிக்கக் கூடாது
நடிகர்களை ரசிகர்கள் கண்மூடித்தனமாக கொண்டாடுவது குறித்து பேசிய அஜித் " ஊடகங்கள் FDFS கொண்டாட்டங்களை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் திரையரங்குகளில் பட்டாசு வெடிப்பது போன்ற அனைத்து வகையான செயல்களையும் நாம் தடுக்க வேண்டும்.. இதையெல்லாம் நிறுத்த வேண்டும். மற்ற நடிகர்களுக்கு எதிராக ஒரு நடிகர் ரசிகர்களை இந்த நடிகர் நம்பர் ஒன் என்று கூறுவது.. ஒவ்வொரு ரசிகரும் தனக்குப் பிடித்த நடிகர் நம்பர் ஒன் என்று நம்ப விரும்புகிறார்கள்.. நீங்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடும்போது நீங்கள் அதை மேலும் கொழுத்தி விடுகிறீர்கள். நீங்கள் அதைச் செய்ய கூடாது" என அஜித் பேசியுள்ளார். அஜித்தின் கருத்திற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தாலும் ஒரு சிலர் அஜித்தின் கருத்தை விமர்சித்து வருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் சரமாரி கேள்வி
அஜித்தின் கருத்திற்கு எதிராக ப்ளூ சட்டை மாறனின் பழைய வீடியோ ஒன்று தற்போது பரப்பப்படுகிறது. இதில் அவர் " அஜித் , ரஜினி போன்ற ரசிகர்கள் தங்கள் ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களாக விலகிக்கொள்கிறார்கள். ஆனால் இதே நடிகர்கள் தங்கள் வளர வேண்டும் என்பதற்காக தங்களுக்காக சண்டை போட ரசிகர்களை ஊக்குவித்தார்கள். இன்று இவர்கள் முன்னணி நட்சத்திரங்களாக உருவாகிவிட்டார்கள். அதனால் அன்று தேவைப்பட்ட ரசிகர்கள் இன்று இவர்களுக்கு தேவையில்லை" என கூறியுள்ளார்
Finally found this video man 😮💨 https://t.co/Lt2HMSyuMn pic.twitter.com/GgHeE5LHm9
— D (@UNLUCKYD21) November 1, 2025





















