மேலும் அறிய

Good Bad Ugly : ஒரே நாளில் 4 கோடி பார்வையாளர்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சாதனை

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரே நாளில் 4.1 கோடி பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது

குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமைக்கிறார். கடந்த மே 10 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கியது.

இதனை அடுத்து கடந்த மே 20 ஆம் தேதி பெரிய அறிவிப்பு இன்றி திடீரென்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி மூன்று விதமான எமோஷன்களோடு அஜித் இந்த போஸ்டரில் காணப்பட்டார். 

போஸ்டர் வெளியான பின்னணி 

அஜித் குமார் முன்னதாக நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற இருந்த சூழலில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. அந்த கேப்பில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை மே 10 ஆம் தேதி  துவங்க கடந்த மே 3-ஆம் தேதி  முடிவு செய்தது படக்குழு. அடுத்த ஒரே வாரத்தில் 700 நபர்களைக் கொண்டு மூன்று பிரம்மாண்டமான செட் உருவாக்கப்பட்டது. இதில் வேலை செய்தவர்கள் நடிகர் அஜித் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பப்பட்டுள்ளார்கள். ஆனால் அஜித் படத்தில் லுக்கில் இருந்ததாலும் செல்ஃபீ எடுத்துக்கொண்டால் அவரது லுக் வெளியே கசிந்துவிடும் என்று படக்குழுவினர் அஞ்சியுள்ளார்கள்.

இரவு பகலாக வேலை செய்தவர்களை வெறும் கையோடு திருப்பி அனுப்ப மனமில்லாத அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடச் சொல்லியிருக்கிறார். பின் அனைவருடனும் அவர் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார். இதுவே இந்த திடீர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதன் பின்னணி.

ஒரே நாளில் 4 கோடி பார்வையாளர்கள்

பெரியளவில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியான இந்த போஸ்டர் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் எந்த வித அப்டேட்டும் இல்லாமல் வருத்தத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இதன் விளைவாக வெளியான ஒரே நாளில் சமூக வலைதளங்களில் 4.1 கோடி பார்வையாளர்களை சென்று சேர்ந்துள்ளது குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர்.

இத்தகவலை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Surya: விஷச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகம் - நடிகர் சூர்யா கடும் கண்டனம்

குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000; படிப்பு செலவு; ரூ.5 லட்சம் டெபாசிட்- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வரின் அறிவிப்புகள்!

Breaking News LIVE: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

TN Assembly Session: ‘எனக்கும் தொகுதி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்’- சபாநாயகரின் கேள்வியும் சுவாரஸ்ய நிகழ்வும்!
‘எனக்கும் தொகுதி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்’- சபாநாயகரின் கேள்வியும் சுவாரஸ்ய நிகழ்வும்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Savukku Shankar | GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Surya: விஷச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகம் - நடிகர் சூர்யா கடும் கண்டனம்
Surya: விஷச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகம் - நடிகர் சூர்யா கடும் கண்டனம்
குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000; படிப்பு செலவு; ரூ.5 லட்சம் டெபாசிட்- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வரின் அறிவிப்புகள்!
குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000; படிப்பு செலவு; ரூ.5 லட்சம் டெபாசிட்- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வரின் அறிவிப்புகள்!
Breaking News LIVE: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
Breaking News LIVE: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
TN Assembly Session: ‘எனக்கும் தொகுதி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்’- சபாநாயகரின் கேள்வியும் சுவாரஸ்ய நிகழ்வும்!
‘எனக்கும் தொகுதி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்’- சபாநாயகரின் கேள்வியும் சுவாரஸ்ய நிகழ்வும்!
Kallakurichi Hooch Tragedy : “கள்ளச்சாராய சாவு இல்லை என ஆட்சியர் பொய் சொன்னது ஏன்? – சொல்ல சொன்னது யார்? பரபரப்பு தகவல்கள்..!

”உங்களை போலவே நானும் வேதனை அடைந்தேன்”.. கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு முதல் முறையாக பேசிய முதல்வர்!

The Goat Update: பிறந்தநாள் ஸ்பெஷல்: வெளியானது தி கோட் படத்தில் விஜய் பாடிய இரண்டாவது பாடல் அறிவிப்பு

Vijay: கள்ளக்குறிச்சி விவகாரத்திற்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க விஜய் உத்தரவு! ரசிகர்கள் ஷாக்

Embed widget