Ajith Kumar: ரியல் மாஸ்டராக மாறிய அஜித்குமார்; வெறித்தனமான வீடியோ இணையத்தில் வைரல்!
Ajith Kumar: நடிகர் அஜித்குமார் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித் குமார் குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினால், நடிகர் அஜித்குமார் ஒரு பைக்கர், அஜித் குமார் ஒரு கார் ரேஸர், அஜித் குமார் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்றவர் உள்ளிட்ட பல விஷயங்களைக் கொட்டிவிடுவார்கள். அஜித் நடிக்கும் படத்தில் எப்படியும் ஒரு பைக் ஸ்டண்ட் கட்டாயம் இடம் பெற்றுவிடும். அந்த அளவுக்கு அஜித் குமாருக்கு பைக் என்றால் ஏகப்பட்ட பிரியம் என்றே கூறலாம்.
The Class by ..... Today#Ajithkumar pic.twitter.com/9P6dj3vFac
— Suresh Chandra (@SureshChandraa) March 20, 2024
இந்நிலையில் நடிகர் அஜித் குமார் பைக் ஓட்டுவதில் உள்ள சில நுட்பமான விஷயங்களை பிக்பாஸ் புகழ் ஆரவ் உள்ளிட்டோருக்கு கற்றுக்கொடுகின்றார். இந்த வீடியோவை நடிகர் அஜித் குமாரின் பி.ஆர்.ஓ - வான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் சுரேஷ் சந்திரா, “ The Class by ..... Today” என குறிப்பிட்டுள்ளார்.